61 வயசுல வாலிபம் புகுந்து விளையாடுது!.. 25 வருஷ இடைவெளியில் 4வது காதலியை பிடித்த பிரபல நடிகர்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் (Tom Cruise) இதுவரை 3 பேரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்தும் செய்து விட்ட நிலையில், 4வதாக பிரபலம் ஒருவருடன் ரகசிய டேட்டிங் செய்து வருவதாக செம ஷாக்கிங்கான தகவல்கள் லீக் ஆகியுள்ளன. மிஷன் இம்பாசிபிள் படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் டாம் க்ரூஸ். டாப் கன் வரிசை படங்களும் இவரது அதிரடி சாகசங்களை ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்து வந்த நிலையில், காதலிலும் அய்யா கில்லி தான் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் டாம் க்ரூஸ்.

ஹாலிவுட்டிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருகிறார் டாம் க்ரூஸ். ஒரு படத்துக்கு 400 முதல் 500 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பணக்கார நடிகரான இவர் ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண்ணுடன் காதல் வலையில் விழுந்து இருப்பதாக கூறுகின்றனர்.

Tom Cruise dating with 25 year age difference Russian girl Elsina Khayrova stuns fans

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்: 61 வயதாகும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் ரோக் நேஷன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. அதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக விமானப்படை அதிகாரியாக டாம் க்ரூஸ் நடித்த டாப்கன் மேவரிக் திரைப்படம் ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளை அள்ளியது.

காதல் படத்தில் தான் அறிமுகம்: 1981ம் ஆண்டு வெளியான Endless Love எனும் காதல் படத்தில் தான் டாம் க்ரூஸ் அறிமுகமே ஆனார். இன்னமும் அவரது முதல் பட டைட்டிலை பின்பற்றும் விதமாக எண்ட்லெஸ் ஆக காதலித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், காதலிகள் தான் மாறிக்கொண்டே வருகின்றனர். வெளிநாடுகளில் ஒருத்தரை ஒருத்தர் உருகி காதலிப்பது எல்லாம் அரிதான விஷயங்கள் தான். ஒவ்வொரு ஹாலிவுட் நடிகரும் மனைவிகளின் லிஸ்ட்டையும் குழந்தைகளின் லிஸ்ட்டையும் எக்கச்சக்கமாக வைத்துள்ளனர். அதே போலத்தான் நடிகைகளும்.

3 முறை திருமணமும் விவாகரத்தும்: 1987ம் ஆண்டு நடிகை மிரியம் ரோஜர்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் டாம் க்ரூஸ். அந்த திருமணம் 3 ஆண்டுகள் வரை மட்டுமே நீடித்தது. 1990ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டு இன்னொரு பிரபலமான நடிகை நிக்கோல் கிட்மேனை அதே ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் டாம் க்ரூஸ். சுமார் 11 ஆண்டுகள் நிக்கோல் கிட்மேன் உடன் காதல் வாழ்க்கையை நடத்தி வந்த டாம் க்ரூஸ் 2001ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். ஆனால், அதன் பின்னர் உடனடியாக யாரையும் திருமணம் செய்யாமல் இருந்தார் டாம் க்ரூஸ். 2006ம் ஆண்டு கேட்டி ஹோம்ஸ் எனும் அமெரிக்க நடிகையை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 2012ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து இனிமேல் காதல், திருமணம் எல்லாம் நமக்கு செட் ஆகாது என தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.

Tom Cruise dating with 25 year age difference Russian girl Elsina Khayrova stuns fans

25 வயது வித்தியாசத்தில் 4வது காதலி: இந்நிலையில், டாம் க்ரூஸ் 2012ம் ஆண்டுக்கு பிறகு யாரையும் காதலிக்காமல் பிடித்த நடிகைகளுடன் உறவு வைத்துக் கொண்டு உல்லாசமாக வாழ்ந்துக் கொண்டு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போது ரஷ்யாவை சேர்ந்த சமூகவாதியான எல்சினா கைரோவா (Elsina Khayrova) என்பவருடன் ரகசியமாக டேட்டிங் சென்று வருவதாகவும் தற்போது அவரை தான் காதலித்து வருவதாக காதலர் தினத்தை முன்னிட்டு சூப்பரான தகவல்கள் லீக் ஆகி உள்ளன. 61 வயதாகும் டாம் க்ரூஸ் தன்னை விட 25 வயது குறைந்த 35 வயது பெண்ணுடன் டேட்டிங்கில் இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X