கான்ஸ் பட விழா...திடீரென கிடைத்த மரியாதை...நெகிழ்ந்துப்போன டாம் குரூஸ்!!
சென்னை: பிரான்சில் நடைபெற்று வரும் 75-வது சர்வதேச கான்ஸ் திரைப்பட விழாவில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் டாம் குரூசுக்கு உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.
பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷங்களுக்கு மத்தியில் பால்ம் டி'ஆர் என்ற உயரிய விருதை டாம் குரூஸ் பெற்றார்.
டாப் கன்: மேவெரிக் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

எழுந்து நின்று கைதட்டினர்
டாம் குரூசுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று சுமார் 5 நிமிடங்கள் கைதட்டி அவரை கௌரவப்படுத்தினர். அப்போது பேசிய டாம் குரூஸ், "பாராமவுண்ட் மக்களுக்கு நன்றி. இப்படி உங்கள் முன்னால் நிற்பது எனது நீண்ட நாள் கனவு. இந்த மாலை நேரத்தை வாழ்வில் என்னால் என்றுமே மறக்க முடியாது" என்று தெரிவித்தார்.

டாப் கன்: மேவெரிக்
ஹாலிவுட் படங்களில் ரிஸ்க் ஸ்டண்ட் காட்சிகளுக்குப் பெயரெடுத்த டாம் குரூஸ் டாப் கன் மேவெரிக் திரைப்படத்தில் சுவாரசியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பீட் மேவெரிக் மிட்செல் என்ற பெயரில் படத்தில் சீனியர் டெஸ்ட் பைலட்டாக நடித்திருக்கிறார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இத்திரைப்படம் இரண்டாவது பாகமாக வெளிவருகின்றது. இத்திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் உட்பட நம் நாட்டுப் பிரபலங்கள் இத்திரைப்படத்தைக் கண்டு களிக்கவிருக்கின்றனர்.

கோவிட்டால் தள்ளிப் போன ரிலீஸ்
டான் கன்: மேவெரிக் திரைப்படத்தின் 2 வது பாகம் 34 வருடங்களுக்குப் பிறகு வெளிவருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. என்றாலும் கோவிட் காலகட்டம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே வந்தது. என்றாலும், திரையரங்குகள் நிறையும் அளவிற்கு என்று மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்களோ அதுவரைக் காத்திருப்பேன் என டாம் குரூஸ் பிடிவாதமாக இத்தனை நாட்கள் ரிலீஸ் தேதியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். கான்ஸ்சுக்குப் பிறகு இத்திரைப்படம் லண்டனில் திரையிடப்படவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
Recommended Video

பால்ம் டி'ஓஆர்
பால்ம் டி'ஓஆர் என்ற இவ்விருது கான்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதாகும். கடந்த 1955-ம் ஆண்டு முதல் இவ்விருது சினிமாவில் உலகளவில் சாதனை புரியும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விமானங்கள் வானில் பறந்து மரியாதை:
டாம் குரூஸ் மற்றும் அவரது டாப் கன் படத்திற்கு இப்படி ஒரு பிரம்மாண்ட மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கேன்ஸ் திரைப்பட விழா புதன்கிழமையன்று ஓவர் டிரைவ் , அதாவது ஓவர் ஃப்ளைட் மூலம் தொடங்கியது. விமானங்கள் வானில் பறந்து அவருக்கு மரியாதை செய்தது கலர் புகையுடன். பிரெஞ்சுக் கொடியின் நிறங்களுடன் மரியாதை செய்யப்பட்டு வானில் இருந்து வந்த இப்படி ஒரு மரியாதையை மக்கள் அனைவரும் மிக பெரிய கௌரவமாக பார்த்தனர்.


Click it and Unblock the Notifications











