மகள் வயது உதவியாளருடன் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு காதல்?

By Siva

லண்டன்: மிஷன் இம்பாசிபிள் 5 படத்தில் நடித்து வரும் டாம் க்ரூஸுக்கு தனது மகள் வயதில் உள்ள உதவியாளர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.

ஹாலிவுட்டில் நெடுநெடுவென இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் மிதமான உயரமுள்ள டாம் க்ரூஸ் பல பெண்களின் கனவுகளில் வருகிறார். 52 வயதானாலும் அவருக்கு இன்னும் ஏராளமான ரசிகைகள் உள்ளனர். மூன்று முறை திருமணமாகி விவாகரத்தான டாம் க்ரூஸ் தற்போது மிஷன் இம்பாசிபிள் 5 படத்தில் நடித்து வருகிறார்.

Tom Cruise has crush on his young assistant

படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடந்து வருகிறது. படத்தில் அவரது உதவியாளரான 22 வயது எமிலி சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் க்ரூஸ், எமிலி இடையே ஒரே காதல் என்று கூறப்படுகிறது. டாம் க்ரூஸின் மூத்த மகள் இசபெல்லாவின் வயது தான் எமிலிக்கு. மகள் வயதில் உள்ளவர் மீது க்ரூஸுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

க்ரூஸ் தன்னுடன் டின்னர் டேட்டுக்கு வருமாறு எமிலியை கேட்டதாக கூறப்படுகிறது. க்ரூஸுக்கு எமிலி போன்று வேறு யார் மீதும் இவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டது இல்லை என்றும், படப்பிடிப்பு தளத்தில் அவர் எமிலியுடன் கடலை போடுவதாகவும் கூறப்படுகிறது.

டாம் க்ரூஸ் தனது இரண்டாவது மனைவியான ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனுடன் சேர்ந்து இசபெல்லா ஜேன் மற்றும் கானர் ஆண்டனி ஆகிய குழந்தைகளை தத்தெடுத்தார். அதில் இசபெல்லாவுக்கு தற்போது 22 வயதாகிறது, கானருக்கு 19 வயதாகிறது.

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தவிர க்ரூஸுக்கு தனது மூன்றாவது மனைவி நடிகை கேட்டி ஹோம்ஸ் மூலம் சூரி என்ற 8 வயது மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X