குட்டி விமானத்தில் குட்டிக்கரணம் அடித்த டாம் க்ரூஸ்.. ரசிகர்களுக்காக அடுத்த ரிஸ்க் எடுத்த ரியல் ஹீரோ

லாஸ் ஏஞ்சல்ஸ்: பல கோடி சம்பளம் வாங்கி விட்டு ரசிகர்களுக்காக கொஞ்சம் கூட ரிஸ்க் எடுக்காமல் நடித்தால் எப்படி என பல ஹீரோக்களும் ஆக்‌ஷன் காட்சிகளில் முடிந்த வரை டூப் போடுவதை தவிர்த்து நடித்து வருகின்றனர். ஆனால், சில ரிஸ்க்கான காட்சிகளில் பெரிய ஹீரோக்கள் நடிக்காமல் டூப் வைத்து அந்த காட்சிகளை படமாக்குவது வழக்கம்.

ஆனால், அந்த ஏமாற்றத்தைக் கூட தனது ரசிகர்களுக்கு ஒருநாளும் தரக்கூடாது என ஒவ்வொரு படத்துக்கும் உசுரைக்கொடுத்து ரிஸ்க் எடுத்து நடித்து வரும் ஹீரோ யார் என்றால் சின்னக் குழந்தை கூட டாம் க்ரூஸ் என இந்த ஹாலிவுட் ஹீரோவின் பெயரைத்தான் சொல்லும்.

Tom Cruise Mission Impossible 8 hollywood 8


இந்நிலையில், ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை ரிஸ்க் எடுத்து நடித்துள்ள டாம் க்ரூஸின் பதை பதைக்க வைக்கும் திக் திக் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

மிஷன் இம்பாசிபிள் 8: Mission: Impossible - Dead Reckoning Part One திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஏஐ தொழில்நுட்பட்தை வில்லனாக்கி இந்த படத்தை டாம் க்ரூஸ் உரூவாக்கி இருந்தார். மிஷன் இம்பாசிபிள் படத்தின் 8ம் பாகமான இந்த படத்தின் 2ம் பாகம் தற்போது சுவிட்சர்லந்தில் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற விமான ஸ்டன்ட் சீன் ரசிகர்களை பரபரப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.

Tom Cruise Mission Impossible 8 hollywood 8


மலையில் இருந்து குதித்து: டெட் ரெக்கனிங் படத்தில் மலையில் இருந்து மோட்டார் பைக் மூலம் குதித்து பாதி வழியில் பாராசூட் ஆன் செய்து தூம் படத்தில் ஹிரித்திக் ரோஷன் ரயில் மீது வந்து இறங்குவது போன்ற ஸ்டன்ட் காட்சியை டூப் போடாமல் செய்து அசத்தினார் டாம் க்ரூஸ். இந்நிலையில், இந்த முறை வானத்தில் மீண்டும் ஒரு சாகசத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

குட்டி விமானத்தில் குட்டிக்கரணம்: ஏற்கனவே மிஷன் இம்பாசிபிள் 7ம் பாகத்திற்காக பெரிய விமானத்தில் தொங்கியபடி சாகசத்தை செய்திருந்தார் டாம் க்ரூஸ். இந்நிலையில், அடுத்த படத்திற்காக மஞ்சள் நிற குட்டி விமானத்தில் அதுவும் அது குட்டிக்கரணம் அடித்து தலைகீழாக பறக்கும் போது அதில், தொங்கிக் கொண்டு ஸ்டன்ட் செய்த காட்சிகள் வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் வெளியாகி ஒட்டுமொத்த அகில உலக டாம் க்ரூஸ் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடிய சீக்கிரமே இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X