Don't Miss!
- News
விதி மீறிட்டாங்க.. பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! பாய்ந்து வரும் சீனா.. விழுந்த "பார்ட்ஸ்" எங்கே?
- Technology
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
- Sports
இந்திய அணிக்கு 2 தமிழக வீரர்களுக்கு அழைப்பு.. ஆஸி.யை சமாளிக்க திட்டம்.. மொத்தம் 6 பேர் சேர்ப்பு
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆத்தாடி.. இவர் மனுஷனே இல்லை.. உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த டாம் க்ரூஸ்.. டிரெண்டாகும் வீடியோ!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பைக் ரேஸ், ஸ்டன்ட் காட்சிகளுக்கெல்லாம் பல முன்னணி ஹீரோக்கள் டூப் போட்டு நடித்து வரும் நிலையில், ஒரே ஒரு பிரம்மாண்ட காட்சிக்காக ஹாலிவுட்டின் டாப் ஹீரோ டாம் க்ரூஸ் 500 ஸ்கை டைவ் மற்றும் 13,000 தடவை மோட்டார் பைக்கில் ஜம்ப் செய்து சாகசம் செய்துள்ள வீடியோ ரசிகர்களை மரண பீதியில் ஆழ்த்தி உள்ளது.
மிஷன் இம்பாசிபிள் படங்களில் கடந்த 26 ஆண்டுகளாக நடித்து வரும் டாம் க்ரூஸ், முதல் பாகத்திற்கு போட்ட ரிஸ்க்கை விட ஒவ்வொரு பாகத்துக்கும் அதிக ரிஸ்க்குகளை உலகளவில் உள்ள தனது ரசிகர்களுக்காக போட்டு வருகிறார்.
ஈரக்குலை நடுங்கும் அளவுக்கு இப்படியொரு உயரத்தில் இருந்து அதுவும் கீழே எந்தவொரு சேஃப்டியும் இல்லாத அதள பாதளத்தில் பைக்கில் இருந்து குதிக்கும் சாகசத்தை எப்படி செய்திருக்கிறார் என மிஸ் பண்ணாமல் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
நன்றி
சொல்வதற்காக
ஹெலிகாப்டரில்
இருந்து
குதித்த
டாம்
குரூஸ்...
அதிர்ச்சியில்
ஹாலிவுட்
ரசிகர்கள்!

60 வயசு ஆனா என்ன
40 பிளஸ் ஆனாலே ஏகப்பட்ட நடிகர்கள் சேஃப்டி தான் முதலில் முக்கியம் என்பதற்காக தங்களுக்கு பதில் டூப் நடிகர்களையே நடித்து வருகின்றனர். ஆனால், 60 வயசு ஆனால், என்னா இப்பவும் நான் யங் பாய் தான் என மிஷன் இம்பாசிபிள் நடிகர் டாம் க்ரூஸ் செய்துள்ள சாகசம் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி உள்ளது. உலகிலேயே இதுவரை இப்படியொரு பைக் சாகசக் காட்சி படமாக்கப்படவில்லை என்பது தான் பெரிய ஹைலைட்.

நினைத்ததை முடிப்பவன்
முடிக்க முடியாத பெரிய பெரிய மிஷன்களை முடிக்கும் கதையுடன் ஜேம்ஸ் பாண்ட் டச்சில் இருக்கும் மிஷன் இம்பாசிபிள் படங்களில் 1996 முதல் 2022 வரை நடித்து வருகிறார். விமானத்தில் ஃபுட் போர்ட் அடிப்பது, ஹெலிகாப்டரை தாறுமாறாக ஓட்டுவது, பெரிய மாடியில் இருந்து லாங் ஜம்ப் செய்யும் போது அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், அசறாமல் அடுத்த சாகசத்தை நிகழ்த்திக் காட்டி உள்ளார் டாம் க்ரூஸ்.

500 ஸ்கை டைவ்
Hellesylt, Norway பகுதியில் உள்ள ஒரு பெரிய மலையில் இருந்து பள்ளத்தாக்கை நோக்கி பைக்கில் இருந்து ஜம்ப் செய்து அதன் பின்னர் சரியான நேரத்தில் பாராசூட்டை ஆன் செய்து லேண்ட் ஆக வேண்டும். இந்த காட்சியை ஒரே சிங்கிள் டேக்கில் எடுத்து விட முடியாது. இதற்காக டாம் க்ரூஸ் 500 ஸ்கை டைவ் சாகசங்களை பல இடங்களில் பல உயரங்களில் எடுத்து பயிற்சி செய்த பின்னரே அந்த பெரிய மலை உச்சியில் இருந்து அப்படியொரு சாகசத்தை நிகழ்த்தி உள்ளார்.

13000 பைக் ஜம்ப்
அந்த பெரிய மலையில் இருந்து அதள பாதாளத்தில் பைக்கை ஓட்டிக் கொண்டு விழ வேண்டும் இந்த சாகசத்திற்காக 13000 தடவை மோட்டார் பைக் கிராஸ் சாகசத்தை சளிக்காமலும் பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டும் செய்து அசத்தி இருக்கிறார் நடிகர் டாம் க்ரூஸ் என்பதை பார்க்கும் போது இப்படியெல்லாம் ஒரு நடிகர் இந்த உலகத்தில் உள்ளாரா என்றே எண்ணத் தோன்றுகிறது.
|
டைட்டிலே தாறுமாறு
மிஷம் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்திற்கு Mission: Impossible - Dead Reckoning என டைட்டிலையே தாறுமாறாக வைத்துள்ளனர். நார்வேயில் எடுக்கப்பட்ட இந்த சாகச காட்சிகள் அடங்கிய படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கி உள்ளார். இந்த ஆண்டு வெளியான டாம் க்ரூஸின் டாப் கன் மேவரிக் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததை விட பல மடங்குகள் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படம் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தியேட்டரில் படம் வெளியாகிறது.