twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகளை நினைத்து இரவெல்லாம் கண்ணீர் சிந்தும் டாம் க்ரூஸ்

    By Siva
    |

    நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது மகள் சூரியை நினைத்து இரவெல்லாம் அழுகிறாராம்.

    ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு 50 வயதாகிவிட்டாலும் இன்னும் பல இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் இதுவரை 3 பேரை திருமணம் செய்து விவாகரத்தாகி தற்போது தனியாக தவிக்கிறார்.

    முதலில் குழந்தை பிறகு திருமணம்

    முதலில் குழந்தை பிறகு திருமணம்

    இரண்டாவது மனைவி நிக்கோல் கிட்மேனை விவாகரத்து செய்த டாம் க்ரூஸ் ஹாலிவுட் நடிகை கேட்டி ஹோம்ஸை சந்தித்து காதலில் விழுந்தார். இதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களின் மகள் சூரி பிறந்தாள். அதே ஆண்டில் நவம்பர் 18ம் தேதி இத்தாலியில் வைத்து க்ரூஸ் கேட்டி ஹோம்ஸை மணந்தார்.

    சைன்டாலஜியால் வந்த வினை

    சைன்டாலஜியால் வந்த வினை

    டாம் க்ரூஸ், கேட்டி ஹோம்ஸ் பிரியக் காரணம் சைன்டாலஜி எனப்படும் மத அமைப்பு தான் என்று தகவல் வெளியானது. க்ரூஸ் சூரியை சைன்டாலஜி சர்சுக்கு அனுப்ப திட்டமிட்டார். தாய் தந்தை மற்றும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சர்ச்சில் வசிப்பதை சைன்டாலஜி வற்புறுத்துகிறது. அதனால் தான் கடந்த ஆக்ஸ்ட் மாதம் கேட்டி மகளை அழைத்துக் கொண்டு குரூஸிடம் இருந்து பிரிந்து சென்றார்.

    சத்தம் இல்லாமல் செட்டில்மென்ட் செய்ய நினைத்த க்ரூஸ்

    சத்தம் இல்லாமல் செட்டில்மென்ட் செய்ய நினைத்த க்ரூஸ்

    க்ரூஸ் கேட்டிக்கு ஒரு தொகையைக் கொடுத்து சத்தமில்லாமல் செட்டில்மென்ட் செய்ய நினைத்தார். ஆனால் கேட்டியோ விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றார். ஊர் அறிய நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றது க்ரூஸுக்கு வருத்தமாம்.

    மகளை நினைத்து அழும் க்ரூஸ்

    மகளை நினைத்து அழும் க்ரூஸ்

    தனது 6 வயது மகள் சூரியை க்ரூஸ் ரொம்பவே மிஸ் பண்ணுகிறாராம். மகளை நினைத்து இரவெல்லாம் கண்ணீர் வடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

    English summary
    Tom cruise is missing his daughter Suri terribly. He misses her so much that he cries at night.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X