twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடேங்கப்பா..! அந்தப் பிரமாண்டப் படத்துக்காக.. கொரோனா இல்லாத கிராமத்தையே உருவாக்கப் போறாங்களாம்!

    By
    |

    மும்பை: கொரோனா இல்லாத கிராமத்தை உருவாக்க பிரபல ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான டாம் குரூஸ் முடிவு செய்துள்ளார்.

    Recommended Video

    உயிர் போய்விடும் என தெரிந்தும் ரிஸ்க் எடுத்த ஹீரோ- வீடியோ

    பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ டாம் குரூஸ். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

    டாப் கன், காக்டெய்ல், ஸ்பேஸ் ஸ்டேஷன் 3டி, த லாஸ்ட் சாமுராய், எட்ஜ் ஆப் டுமாரோ உட்பட இவரது பல படங்கள் கவனிக்கப்பட்டன.

    ஆமா.. வயசாயிட்டே போகுதே..எப்பதான் கல்யாணம் பண்ணுவீங்க? பிரபல நடிகை தங்கையிடம் கேட்கும் ஃபேன்ஸ்!ஆமா.. வயசாயிட்டே போகுதே..எப்பதான் கல்யாணம் பண்ணுவீங்க? பிரபல நடிகை தங்கையிடம் கேட்கும் ஃபேன்ஸ்!

     மிஷன் இம்பாசிபிள்

    மிஷன் இம்பாசிபிள்

    இவரது, மிஷன்: இம்பாசிபிள் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஆஸ்கர் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ள இவர், கோல்டன் குளோப் விருதுகளை மூன்று முறை பெற்றவர். ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் டாம் குரூஸ், மிஷன் இம்பாசிபிள், த லாஸ்ட் சாமுராய் உட்பட பல படங்களை தயாரித்தும் உள்ளார்.

    கொரோனா

    கொரோனா

    இப்போது, 'மிஷன் இம்பாஸிபிள் 7' படத்தை உருவாக்கி வருகிறார். ஏற்கனவே தாமதமான இதன் படப்பிடிப்பு கொரோனா காரணமாக மேலும் தாமதமாகி இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்புக் குழு தங்கி படப்பிடிப்பைத் தொடர, கொரோனா இல்லாத கிராமம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளார், டாம் குரூஸ்.

     காத்திருக்க வேண்டும்

    காத்திருக்க வேண்டும்

    இதுபற்றி படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'நிலைமை உடனடியாக சகஜமாக மாறும் என்பதற்கு எந்த அறிகுறியுமில்லை. அதனால் பாதுகாப்பாகவும் விரைவாகவும் படத்தை முடிக்க, இதுதான் சிறந்த வழி. அதோடு இப்போது ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் தங்குவதற்கு அறைகள் கிடைப்பது கஷ்டம். அதனால் பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கி படமாக்க வேண்டும், இல்லை என்றால் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

     அதிக செலவுதான்

    அதிக செலவுதான்

    உலகின் பெரிய ஹீரோக்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே இடத்தில் இந்தப் படத்துக்காக பணியாற்ற இருக்கின்றனர். இந்த கிராமத்தை உருவாக்குவதால் அதிக செலவாகும். ஆனால் டாம் குரூஸ் எப்போதும் பிரமாண்டமாகவும் மற்றவர்களை விட பெரிதாகவும் செய்பவர் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை வெனிஸில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது.

     நவம்பர் ரிலீஸ்

    நவம்பர் ரிலீஸ்

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அங்கிருந்து இங்கிலாந்துக்கு மாற்றப்பட்டது. இப்போது இதன் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கும் என்று தெரிகிறது. ஜூலை மாதம் வெளியாவதாக இருந்த இந்தப் படம், நவம்பருக்கு தள்ளிப் போயிருக்கிறது. டாம் குரூஸுடன் சைமன் பெக், அலெக்ட், பால்ட்வின், வனிசா கிர்பி, ரெபக்கா பெர்குசன் உட்பட பலர் நடிக்கின்றனர். கிறிஸ்டோபர் மேக்குவாரி இயக்குகிறார்.

    English summary
    As the cast and crew of Mission: Impossible return to shoot, actor Tom Cruise promises to provide safe environment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X