புர்ஜ் கலிபாவில் திரையிடப்பட்ட டாம் க்ரூஸின் படக்காட்சிகள்... சுற்றுலா பயணிகள் உற்சாக கொண்டாட்டம்!

துபாய் : துபாயில் உள்ள உயரமான கட்டிடமாக புர்ஜ் கலிபா காணப்படுகிறது. இதன் உயரம் 828 மீட்டர். பிரத்யேகமான வடிவமைப்புடன் காணப்படும் இந்த கட்டிடத்தில் சிறப்பான பல விஷயங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது டாம் க்ரூஸின் டாப் கன் மேவரிக் படம் இந்த கட்டிடத்தில் திரையிடப்பட்டு அனைவரையும் கவர்ந்துள்ளது.

 டாப் கன் மேவரிக் படம்

டாப் கன் மேவரிக் படம்

நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில் தற்போது சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் டாப் கன் மேவரிக். 36 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. முதல் நாளிலேயே முன்னதாக வெளியான பிரீமியர் ஷோக்களுடன் 33 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தப் படம் ஈட்டியுள்ளது.

 170 மில்லியன் டாலர் பட்ஜெட்

170 மில்லியன் டாலர் பட்ஜெட்

170 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளது. முதல் நான்கு நாட்களிலேயே இந்த பட்ஜெட்டை படம் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள எப்-18 ரக போர் விமானங்களின் பயன்பாட்டிற்காகவே படக்குழு ஒரு மணிநேரத்திற்கு 9 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளது. மேலும் இதை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இளமை குறையாத டாம் க்ரூஸ்

இளமை குறையாத டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸிற்கு 60 வயதான நிலையில், அவர் தற்போதும் 40 வயது இளைஞராகவே காணப்படுகிறார். பல சாகசக் காட்சிகளை இந்தப் படத்தில் அவர் மேற்கொண்டுள்ளார். அவரது மிஷன் இம்பாசிபள் படத்தின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள டாப் கன் மேவரிக் படம் மிஷன் இம்பாசிபள் போலவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தியாவில் சிறப்பான வசூல்

இந்தியாவில் சிறப்பான வசூல்

டாம் க்ரூஸ் படங்களுக்கு என்று எப்போதுமே ஒரு ரசிகர்கள் வட்டம் காணப்படும். இந்தப் படமும் உலகளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே முதல் நாளில் 2 கோடி ரூபாய் வசூலை படம் எட்டியுள்ளது. முன்னதாக படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புர்ஜ் கலிபாவில் திரையிடல்

புர்ஜ் கலிபாவில் திரையிடல்

இந்நிலையில் தற்போது துபாயின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் டாப் கன் மேவரிக் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து பார்க்கும் கட்டிடமாக புர்ஜ் கலிபா உள்ள நிலையில், உலகளவில் சிறப்பான விஷயங்களே இங்கு திரையிடப்படும்.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

அந்த வரிசையில் தற்போது டாப் கன் மேவரிக் படத்தின் காட்சிகள் தற்போது புர்ஜ் கலிபாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களும் கண்டு களித்தனர். வண்ண விளக்குகளுடன் திரையிடப்பட்ட இந்தக் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X