twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னொரு தடவை அப்படி செஞ்சீங்க.. அவ்ளோதான்.. தனது குழுவை ஆபாசமாக திட்டிய டாம் க்ரூஸ்.. ஏன்?

    |

    சென்னை: மிசன் இம்பாசிபிள் அடுத்த பாகத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் டாம் க்ரூஸ், தனது குழுவை ஆபாசமாக திட்டியுள்ள ஆடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    அதிகளவில் சம்பளம் வாங்கும் ஹாலிவுட் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் டாம் க்ரூஸ்.

     என்றும் கிளாஸ் அண்டு மாஸ் சிங்கர் ஹரிஹரன் ஸ்பெஷல் ரவுண்டப்! என்றும் கிளாஸ் அண்டு மாஸ் சிங்கர் ஹரிஹரன் ஸ்பெஷல் ரவுண்டப்!

    டாம் க்ரூஸின் மிசன் இம்பாசிபிள் படங்களுக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    மிசன் இம்பாசிபிள் அடுத்த பாகம்

    மிசன் இம்பாசிபிள் அடுத்த பாகம்

    1996ம் ஆண்டு முதல் இதுவரை மிசன் இம்பாசிபிள் படத்தின் 6 பாகங்கள் வெளியாகி பல்லாயிரக் கணக்கான கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் 7வது பாகத்தை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் டாம் க்ரூஸ் தனது குழுவினரை ஆபாசமான வார்த்தைகளில் திட்டி எச்சரிக்கும் ஆடியோ பதிவு சினிமா உலகினரை அதிரவைத்துள்ளது.

    கொரோனா துச்சமாக எண்ணி

    கொரோனா துச்சமாக எண்ணி

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் சினிமா துறை முழுவதுமாக 5 முதல் 6 மாத காலத்திற்கும் மேலாக முடக்கப்பட்டு கிடந்தது. இந்நிலையில், மீண்டும் சினிமா ஷூட்டிங் தொடங்கி நடத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனாவை துச்சமாக எண்ணி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத தனது குழுவில் பணியாற்றும் ஊழியர்களை தான் டாம் க்ரூஸ் அப்படி எச்சரித்துள்ளார்.

    தூக்கி அடிச்சுடுவேன்

    தூக்கி அடிச்சுடுவேன்

    கேப்டன் விஜயகாந்த் ஸ்டைலில் சொன்னால் தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்கோ என்பது போல, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாமல் இன்னொரு முறை பணியில் யவரேனும் இருந்தால், அவர்களை உடனடியாக வேலையை விட்டு வெளியே அனுப்பிடுவேன். அது யாராக இருந்தாலும் சரி என டாம் க்ரூஸ் காரசாரமாக பேசியுள்ள ஆடியோ அவரது குழுவை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா படக்குழுவுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது.

    ஏன் இத்தனை ஆத்திரம்

    ஏன் இத்தனை ஆத்திரம்

    கொரோனாவால் பல்லாயிரக் கணக்கான சினிமாவை நம்பி இருக்கும் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், மீண்டும் சினிமாவை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஊழியர்கள், அலட்சியமாக செயல்பட்டு, குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனாவை பரப்பி விட்டால், மீண்டும் ஷூட்டிங் முடக்கப்படும் அச்சத்தை உணர்ந்து தான் டாம் க்ரூஸ் இத்தனை ஆவேசமாக திட்டித் தீர்த்துள்ளார்.

    குவிகிறது பாராட்டு

    குவிகிறது பாராட்டு

    சமீபத்தில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், பேட்மேன் பட ஹீரோ ராபர்ட் பேட்டின்சனுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பல இடங்களில் இது போன்ற கவனக்குறைவால் கொரோனா பரவல் நிகழ்வதால் தான் டாம் க்ரூஸ், இந்த எச்சரிக்கை மணியை அடித்துள்ளார் என ஏகப்பட்ட பிரபலங்களும் சினிமா ரசிகர்களும் டாம் க்ரூஸ் ஆடியோவை கேட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Hollywood actor Tom Cruise warns his Mission Impossible 7 crew members audio leaked and goes viral around globally. He wish to fired who will don’t follow the Covid 19 safety measures in his shooting spot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X