பெரிய படத்தை.. பெரிய ஸ்க்ரீன்ல தான் பார்க்கணும்.. டெனெட் படத்தை தியேட்டரில் பார்த்த டாம் க்ரூஸ்!
லண்டன்: இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளார் நடிகர் டாம் க்ரூஸ்.
Recommended Video
லண்டனில் மிஷன் இம்பாசிபிள் ஷூட்டிங்கிற்காக வந்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், அங்கு திறக்கப்பட்டுள்ள தியேட்டர்களில், டெனெட் படம் திரையிடப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டு மகிழும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உலகளவில் டிரெண்டாக்கி உள்ளார்.

தியேட்டர்கள் திறப்பு
கொரோனா லாக்டவுன் காரணமாக புதுப் படங்கள் தியேட்டர்களில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது, கொரோனா தளர்வுகள் காரணமாக பல நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, துபாய், சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்டோபர் நோலன் படம்
ரிலீஸ் பண்ணா தியேட்டரில் தான் ரிலீஸ் பண்ணுவேன் என இருந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் புதிய படமான டெனெட் படம் உலகளவில் வெளியாகி உள்ளது. பாலிவுட் படங்களும், கோலிவுட் படங்களும் ஒடிடியில் வெளியாகி வரும் நிலையில், எந்தவொரு பெரிய ஹாலிவுட் படமும் ஒடிடியில் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் அதிகம்
ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி பட்ஜெட்களில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள் ஒடிடியில் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பே இல்லை. மேலும், அந்த படங்களை சின்ன ஸ்க்ரீனில் பார்ப்பதை விட பிரம்மாண்ட திரையரங்குகளில் பார்த்தால் தான் ரசிகர்களுக்கும், அதன் படைப்பாளிகளுக்கும் திருப்தியே வரும் என்றும் உறுதியாக உள்ளனர்.

தியேட்டரில் படம் பார்த்த டாம் க்ரூஸ்
மிஷன் இம்பாசிபிள் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஹீரோக்களுக்கு இணையாக அதிரடி ஆக்ஷன்களை நடத்திக் காட்டும் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், தற்போது, லண்டனில் உள்ள திரையரங்கு ஒன்றில், டெனெட் படத்தை பார்க்கும் வீடியோ காட்சியை பகிர்ந்து உலகளவில் வைரலாக்கி வருகிறார்.

மீண்டும் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்
பெரிய படங்களை, பெரிய திரைகளில் பார்த்தால் தான் பிடிக்கிறது என பதிவிட்டுள்ள அவர், மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு, ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்க்கும் எக்ஸ்பீரியன்ஸ் ரொம்பவே பிடிச்சு இருக்கு.. கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படம் ரொம்ப சூப்பரா இருக்கு என்றும் பாராட்டி உள்ளார்.

மாஸ்க் அணிந்தபடி
காரில் ஏறி தியேட்டருக்கு வந்து, படத்தை பார்த்து, எழுந்து நின்று பாராட்டி, மகிழ்ச்சி அடையும் அந்த வீடியோவில் நடிகர் டாம் க்ரூஸ் பாதுகாப்பு விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் இருப்பது தெளிவாக தெரிகிறது. மாஸ்க் அணிந்து கொண்டு, அனைவரும் தியேட்டரில் படம் பார்க்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











