விஜய் ரூட்டை பிடித்த டாம் க்ரூஸ்.. ஒன் லாஸ்ட் டைம்.. மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் டிரைலர் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 20 வருடங்களாக மிஷன் இம்பாசிபிள் படத்துக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார் டாம் க்ரூஸ். ஜன நாயகன் படம் விஜய்யின் ஒன் லாஸ்ட் டைம் என சொல்லப்பட்டுள்ள நிலையில், ஒன் லாஸ்ட் டைம் என்னை நம்புங்க என்கிற வசனத்துடன் டாம் க்ரூஸின் அதிரடி ஆக்‌ஷன் படமான மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் படத்தின் மிரள வைக்கும் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

1996ம் ஆண்டு மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் வெளியாகிறது. அந்த படத்திலேயே அதீத ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகள் மற்றும் ஸ்டன்ட் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் நடிக்கத் தொடங்கிய டாம் க்ரூஸ் 20 வருடங்களாக அந்த படத்தின் பல பாகங்களில் ஒவ்வொரு படத்துக்கும் உண்மையாகவே உயிரை பணயம் வைத்து நடித்து வருகிறார்.

Tom Cruise s Mission Impossible The FInal Reckoning Trailer gives goosebumps to fans

ஓடும் விமானத்தில் ரியலாகவே தொற்றிக் கொண்டு ஃபுட் போர்ட் அடித்த முதல் ஆள் என்றால் அது டாம் க்ரூஸாகத்தான் இருப்பார். இந்த மிஷன் இம்பாசிபிள் கடைசி பாகத்தில் மஞ்சள் நிற குட்டி பிளேனிலும் அவர் ஃபுட் போர்டு அடித்துச் செல்லும் காட்சிகளை பார்த்தாலே ரோலர் கோஸ்டரில் தலைகீழாக போகும் உணர்வு தான் ஏற்படுகிறது.

மிஷன் இம்பாசிபிள் கடைசி பாகம்: ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போல நாம் ஒரு சீரிஸை ஆரம்பித்து பண்ண வேண்டும் என நினைத்து கடந்த 20 ஆண்டுகளாக பல பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சாதிக்க முடியாத விஷயங்களை சாதித்துக் காட்டும் ஏஜென்ட் Ethan கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸை பார்த்தாலே போதும் என்கிற அளவுக்கு அந்த படத்தின் மீது உலகளவில் ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளனர். கடைசி பாகம் வரும் மே 23ம் தேதி வெளியாகிறது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

ஏஐ தான் வில்லனே: மிஷன் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங் திரைப்படத்தின் 2ம் பாகமாக இந்த படம் அமைந்துள்ளது. இதற்கு ஃபைனல் ரெக்கனிங் என பெயர் வைத்துள்ளனர். கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் உலகையே தற்போது ஜிபிலி பைத்தியமாக மாற்றி வரும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் உலகையே ஆட்டிப் படைக்கும் வில்லனாக எப்படி மாறப்போகிறது. அதனால், உலகில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்த கற்பனை புனைவு கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட வெற்றி பெறுமா?: முந்தைய பாகம் விமர்சன ரீதியாக சற்றே அடிவாங்கினாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த 2ம் பாகத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படைப்பின் உச்சம் என வாயை பிளந்து வருகின்றனர். இந்த படம் டாம் க்ரூஸுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையுமா என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும். ரசிகர்கள் கொடுக்கக்கூடிய 200 ரூபாய் டிக்கெட்டுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏமாற்றாமல் தரமான சம்பவமாகவே ஒவ்வொரு முறையும் டாம் க்ரூஸ் படங்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மே 1ம் தேதி சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு பிறகு தியேட்டரில் பார்க்க வொர்த்தான படமாக இந்த படம் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X