twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவிலிருந்து மீளலாம்.. குணமாகி வரும் டாம் ஹேங்க்ஸ்.. பலருக்கும் நம்பிக்கையாகி வருகிறார்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சன் திரும்பியுள்ளனர்.

    Recommended Video

    யாரும் வெளியே வராதீங்க! கண் கலங்கிய வடிவேலு

    கடந்த மார்ச் 11ம் தேதி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

    ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சனுக்கு கொரோனா தொற்று பரவியது.

    அதிர்ந்த ஹாலிவுட்

    அதிர்ந்த ஹாலிவுட்

    ஆஸ்கர் விருது வென்றுள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட செய்தியை அறிந்த பல பிரபலங்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். டாம் ஹேங்க்ஸை தொடர்ந்து, இத்ரிஸ் எல்பா, ஜேம்ஸ் பாண்ட் நடிகை ஓல்கா குரியலென்கோ உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    பயோபிக் படம்

    பயோபிக் படம்

    ஃபாரஸ்ட் கம்ப், சேவிங் பிரைவேட் ரியான், டாவின்ஸி கோட், இன்ஃபெர்னோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் டாம் ஹேங்க்ஸ், இசையமைப்பாளர் எல்விஸ் பிரெஸ்லியின் பயோபிக் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். பாஸ் லர்மேன் இயக்கத்தில் உருவாகி வந்த அந்த படத்தின் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது.

    தனிமைப் படுத்தப்பட்டனர்

    தனிமைப் படுத்தப்பட்டனர்

    மார்ச் 11ம் தேதி ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், இருவரும் குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு நடந்த இருவரும் விரைவிலேயே நல்ல முன்னேற்றத்தை கண்டனர்.

    மருத்துவமனையிலிருந்து

    மருத்துவமனையிலிருந்து

    மார்ச் 16ம் தேதி இருவரின் உடலும் முன்னேற்றம் அடைந்து வருவதை கண்டு மகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள், மருத்துவமனையில் இருந்து அவர்களை விடுவித்தனர். இருவரும், ஆஸ்திரேலியாவில், தொடர்ந்து தங்களை தாங்களே ஐசோலேட் செய்து வந்தனர். 63 வயதை அடைந்த இருவரும் முன்னேறி வருவது பலருக்கும் உத்வேகத்தையும் நம்பிக்கையும் அளித்து வருகிறது.

    மீண்டும் அமெரிக்கா

    மீண்டும் அமெரிக்கா

    கொரோனா பாதிப்பில் இருந்து 14 நாட்கள் தனிமைப்பட்டுக் கிடந்த நிலையில், இருவரது உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு இருவரும் திரும்பியுள்ளனர். ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ், தனிமைப்பட்டு கிடப்பதின் அவசியத்தையும், தேவையையும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். நம்பிக்கையுடன் சோஷியல் டிஸ்டன்ஸை கடைபிடித்தால் கொரோனாவில் இருந்து மீளலாம்.

    English summary
    American actor Tom Hanks and his wife Rita Wilson are back in Los Angeles from Australia after testing positive for coronavirus and quarantining for two weeks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X