நம்ம படத்தை நாமே பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.. இப்படியும் ஒரு நடிகர்!

By Sudha

லண்டன்: உலகமே இவரது படங்களை விழுந்து விழுந்துப் பார்த்து மெய் சிலிர்க்கிறது. ஆனால் இந்த நடிகரோ, தான் நடித்த படத்தை இதுவரை ஒருமுறைக்கு மேல் பார்த்ததில்லையாம். திரும்பத் திரும்பப் பார்ப்பது பைத்தியக்காரத்தனம் என்று வேறு சொல்கிறார் இவர்.

ரொம்ப ஆச்சரியாக இருக்கிறது இல்லையா... ஆனால் டாம் ஹேங்ஸ் அப்படித்தான் சொல்கிறார்.

நாம் நடித்த படத்தை நாமே திரும்பத் திரும்பப் பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேட்கிறார் டாம்.

ஹாலிவுட் ஹாட் ஸ்டார்

ஹாலிவுட் ஹாட் ஸ்டார்

ஹாலிவுட்டின் அருமையான நடிகர்களில் டாமுக்கு தனி இடம் உண்டு. 57 வயதாகும் டாம், 1978ம் ஆண்டிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாரஸ்ட் கம்ப்...

பாரஸ்ட் கம்ப்...

பாரஸ்ட் கம்ப், டாய் ஸ்டோரி, சேவிங் பிரைவேட் ரியான், க்ரீன் மைல் என பல அட்டகாசமான படங்களில் நடித்துள்ளார் டாம்.

ஒரு தடவைதான் பார்ப்பேன்

ஒரு தடவைதான் பார்ப்பேன்

இவரது படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கவும் அவர்கள் தயார்தான். ஆனால் டாமோ, தனது படத்தை ஒரு முறைக்கு மேல் பார்க்கவே மாட்டாராம்.

அதில் என்ன அர்த்தம் இருக்கிறது...

அதில் என்ன அர்த்தம் இருக்கிறது...

நீங்கள் நடித்த படத்தை நீங்களேத் திரும்பத் திரும்பப் பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. எனது படங்களை நான் மீண்டும் மீண்டும் பார்க்க மாட்டேன்.

ஒரு தடவைதான்

ஒரு தடவைதான்

ஒரே ஒரு முறைதான் எனது படத்தை நான் பார்ப்பேன். மறுபடியும் மறுபடியும் பார்ப்பது பைத்தியக்காரத்தனம். அதை நான் செய்ய மாட்டேன்.. என்று கூறியுள்ளார் டாம்.

அப்ப மறுபடியும் மறுபடியும் ஒரு படத்தை பார்ப்பது பைத்தியக்காரத்தனமா... அப்படிப் பார்ப்பவர்கள் பைத்தியங்களா.. சொல்லுங்க வேலு நாய்க்கரே...!!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X