twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவில் சிக்கிய டாம் ஹான்க்ஸ்.. இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

    |

    ஆஸ்திரேலியா: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த ஹாலிவுட் திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

    வார்னர் பிரோஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் டாம் ஹான்க்ஸ் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், டாம் ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதித்தது.

    தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் டாம் ஹான்க்ஸ், தற்போது அனுபவிக்கும் நிலைமை குறித்து பதிவிட்டுள்ளார்.

    ஹாலிவுட் நடிகருக்கே

    ஹாலிவுட் நடிகருக்கே

    ஏழை - பணக்காரன் என்ற பேதமின்றி, யாரா இருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ வரலாற்றிலேயே, இப்படியொரு கொடிய நிகழ்வு இதுவரை நடந்தது இல்லை என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. ஹாலிவுட் நடிகர் ஆனாலும், கொரோனாவின் கோர பற்களில் இருந்து தப்ப முடியாது.

    ரொம்ப டயார்ட்டா இருக்கு

    ரொம்ப டயார்ட்டா இருக்கு

    கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்பது உறுதியானதும், ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சனை, மருத்துவக் குழுவினர் தனிமைப்படுத்தி ட்ரீட்மென்ட் செய்து வருகின்றனர். இது குறித்து, முதலில் அறிவித்த டாம் ஹான்க்ஸ், லேசான இருமல் மற்றும் காய்ச்சல் தான் தெரிந்தது. இருவருக்கும் உடம்பு ரொம்ப டயார்ட்டா இருப்பது போல தோன்றுகிறது என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

    எங்களால் யாருக்கும்

    எங்களால் யாருக்கும்

    இந்நிலையில், தற்போது, மீண்டும் ஒரு பதிவை நடிகர் டாம் ஹான்க்ஸ் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தங்களை தாக்கியது குறித்து அறிந்து, பிரார்த்தனை பண்ண பலருக்கும் நன்றி. இதுவரை தனிமைப்படுத்தப் பட்டே இருக்கிறோம். எங்களால் யாருக்கும் இந்த தொற்று பரவாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றுள்ளார்.

    63 வயசு

    63 வயசு

    கேஸ்ட் அவே, ஃபாரஸ்ட் கம்ப், டேவின்ஸி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ், இன்ஃபெர்னோ உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த டாம் ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சன் ஆகிய இருவருக்கும் 63 வயதாகிறது. வயதான காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் என்பதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர்.

    Recommended Video

    Man vs Wild Rajinikanth | Bear Grylls | Valimai | Boomi Teaser
    கவலை வேண்டாம்

    கவலை வேண்டாம்

    மருத்துவ ஜாம்பவான்கள் எங்கள் இருவரையும் பத்திரமாக பார்த்துக் கொள்கின்றனர். நேற்றை விட இன்று பரவாயில்லை. ரசிகர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. எங்களுக்கு ஒண்ணும் ஆகல.. ரசிகர்கள் யாரும் வீணாக கண்ணீர் சிந்த தேவையில்லை என பதிவிட்டுள்ளார். டாம் ஹான்க்ஸ்க்கு கொரோனா பரவிய தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் பலர் பீதியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    On Thursday, both appeared in good spirits in a photo, adding, “We are taking it one-day-at-a-time,” he wrote. “There are things we can all do to get through this by following the advice of experts and taking care of ourselves and each othe
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X