twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா வைரஸ்ன்னு என்னை கிண்டல் பண்றாங்க.. சிறுவன் அனுப்பிய கடிதம்.. உருகிப் போன டாம் ஹேங்க்ஸ்!

    |

    மெல்போர்ன்: கொரோனா டி வ்ரைஸ் என்கிற பெயர் கொண்ட சிறுவனை கொரோனா வைரஸ் என பலரும் கிண்டல் செய்வதாக சிறுவன் அனுப்பிய கடிதம் நடிகர் டாம் ஹேங்க்ஸ் மனதை உருக்கி இருக்கிறது.

    Recommended Video

    'வீட்டைத் தாண்டி நீயும் வரகூடாது, நானும்..' வடிவேலுவின் அடுத்த வீடியோ!

    உலகையே ஆட்டி படைத்து வருகிறது கொடிய நோயானா கொரோனா வைரஸ். இதுவரை 27 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காதலில் விழுந்த கதைக்குப் பின்னால் அந்த கருப்பு வெள்ளை போட்டோ..தனுஷ் பட நாயகியின் எமோஷனல் போஸ்ட்!காதலில் விழுந்த கதைக்குப் பின்னால் அந்த கருப்பு வெள்ளை போட்டோ..தனுஷ் பட நாயகியின் எமோஷனல் போஸ்ட்!

    சுமார் 1 லட்சத்து 92 ஆயிரம் பேர் கொரோனா எனும் கொடிய வைரஸ் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    எச்சரிக்கை மணி

    எச்சரிக்கை மணி

    கொரோனா வைரஸ் சாமானியர்களை மட்டுமின்றி பிரபலங்களையும் பாதிக்கும் என்பதை உலகமே அறிய காரணமாக இருந்தவர் நடிகர் டாம் ஹேங்க்ஸ் தான். ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது ரிட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட விஷயம் ஹாலிவுட் முதல் அனைத்து திரையுலக பிரபலங்களையும் கொரோனா குறித்த எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலிக்கச் செய்தது.

    டாம் ஹேங்க்ஸுக்கு கொரோனா

    டாம் ஹேங்க்ஸுக்கு கொரோனா

    63 வயாதாகும் நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சன், ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் இருந்த போது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால், டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி சீக்கிரத்திலேயே அதன் பாதிப்பில் இருந்து விடுதலையாகி, லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பினர்.

    சிறுவன் கொரோனா கடிதம்

    சிறுவன் கொரோனா கடிதம்

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கொரோனா டி வ்ரைஸ் (Corona De Vries) எனும் 8வயது சிறுவன், தனது நண்பர்கள் தன்னை கொரோனா வைரஸ் என கிண்டல் செய்வதாக, டாம் ஹேங்க்ஸுக்கு எழுதியுள்ள கடிதம் அவரையும் அவரது மனைவியையும் உருகச் செய்திருக்கிறது.

    "ஹாய் டாம் ஹேங்க்ஸ், நலமாக இருக்கிறீர்களா? உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அறிந்தேன். டாய் ஸ்டோரி படத்தில் நீங்கள் குரல் கொடுத்திருப்பது எனக்கு பிடிக்கும். எனது பெயரில் கொரோனா உள்ளதால், பள்ளியில் பல மாணவர்கள் என்னை கொரோனா வைரஸ் என கிண்டல் செய்து வருகின்றனர். என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், பலரும் கிண்டல் செய்வதால், ரொம்ப கோவமா வருது" என்கிற ரீதியில் கடிதம் எழுதியுள்ளான்.

    கொரோனா டைப்ரைட்டர்

    கொரோனா டைப்ரைட்டர்

    சிறுவனுக்கு ஆறுதல் கூற நினைத்த நடிகர் டாம் ஹேங்க்ஸ் தனக்கு மிகவும் பிடித்தமான கொரோனா எனும் பெயர் கொண்ட டைப் ரைட்டரை பரிசாக அந்த சிறுவனுக்கு அனுப்பியுள்ளார்.

    மேலும், நீ எனக்கு நண்பனாக கிடைத்ததற்கு நன்றி, உலகிலேயே கொரோனா எனும் பெயர் கொண்ட ஒருவனாக நீ இருக்கிறாய். எப்படி சூரியனை சுற்றி ஒரு தனித்துவமான வட்டம் இருக்கிறதோ அதனை போன்று தனித்துவம் கொண்டவன் நீ எனக் கூறி சிறுவனின் மனதை குளிரவைத்துள்ளார்.

    டாம் ஹேங்க்ஸுக்கு அப்படியொரு கடிதத்தை எழுதிய கொரோனா சிறுவனுக்கும், பரிசளித்த டாம் ஹேங்க்ஸுக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

    English summary
    om Hanks has sent a letter and a Corona brand typewriter to an Australian boy who wrote to him about being bullied over his name, Corona.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X