ஆன்லைனில் வெளியாகிறது பிரபல ஹீரோவின் ஹாலிவுட் படம்.. இரண்டாம் உலக போர் பற்றிய கதையாமே!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹீரோ நடித்துள்ள ஹாலிவுட் படம் ஆன்லைனில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

டாம் ஹாங்ஸ், ஸ்டீபன் கிராஹம், ரோம் மோர்கன், எல்சபெத் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம், கிரே ஹாண்ட் (Greyhound). ஆரோன் ஸ்னீடர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு டாம் ஹாங்ஸ் திரைக்கதை எழுதியுள்ளார்.

Tom Hanks’ war drama ‘Greyhound’ skips theatres

இரண்டாம் உலகப் போரை மையமாக வைத்து உருவாகப்பட்டுள்ள இந்தப் படம், த குட்ஷெபர்ட் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. இந்தப் படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக உலகம் முழுவதும் சினிமாவின் மொத்த திட்டங்களும் மாறிவிட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. எடுத்து முடிக்கப்பட்டுள்ல பல படங்களின் ரிலீசும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற நிச்சயமற்ற நிலை இருப்பதால், ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.

அதன் அடிப்படையில், டாம் ஹாங்க்ஸின் கிரே ஹாண்ட் படமும் நேரடியாக ஆன்லைனில் வெளியாகிறது. இதை ஆப்பிள் டிவி+ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடியாக வெளியிட சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X