twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா வைரஸ் கொடூரம்.. இந்த ஹாலிவுட் நடிகரையும் விட்டு வைக்கல.. அடுத்து என்ன செய்ய போகுதோ?

    |

    ஆஸ்திரேலியா: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Recommended Video

    Cinema Square: இன்றைய சினிமா செய்திகள்

    கேஸ்ட் அவே, ஃபாரஸ்ட் கம்ப், சேவிங் பிரைவேட் ரியான், டேவின்சி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ், ஆஸ்திரேலியாவில் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக இருந்த போது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ஆக வந்துள்ளது என்பதை, டாம் ஹான்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    100க்கும் மேலான நாடுகளில்

    100க்கும் மேலான நாடுகளில்

    சீனாவில் அதிகம் பேரை காவு வாங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகளவில் நூற்றுக்கும் மேலான நாடுகளில் பரவி உள்ளது. 1.25 லட்சம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்

    ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்

    கொரோனா வைரஸ் பீதியால், ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை படத்தின் ரிலீஸ் தேதியே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வார்னர் பிரோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடித்து வந்த படத்தின் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், பிரபல நடிகர் டாம் ஹான்க்ஸ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

    தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

    நடிகர் டாம் ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், இருவரையும் தனிமைப்படுத்தி, மருத்துவ சிகிச்சை வழங்கி வருகின்றனர். டாம் ஹான்க்ஸ் பெயரை குறிப்பிடாமல், இந்த விஷயத்தை வார்னர் பிரோஸ் அறிவித்திருந்த நிலையில், டாம் ஹான்க்ஸே இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

    3 பேர் பலி

    3 பேர் பலி

    டாம் ஹான்க்ஸ் மற்றும் ரிட்டா வில்சன் உள்பட ஆஸ்திரேலியாவில் இதுவரை 136 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இந்த நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், ஆஸ்திரேலிய அரசு கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்கவும், சிகிச்சை அளிக்கவும் நிதி ஒதுக்கியுள்ளது.

    அடுத்து என்ன?

    அடுத்து என்ன?

    சினிமா தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், உலகளவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சினிமா மட்டுமின்றி, ஒட்டுமொத்த தொழில் துறையும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பை சந்தித்து வருகிறது. சீக்கிரமே இந்த நோய்க்கு ஒரு தீர்வை கண்டுபிடித்தாக வேண்டிய சூழலில் உலகம் இருக்கிறது.

    English summary
    Tom Hanks is the first major Hollywood star to publicly state that he has the virus that is sweeping around the world, infecting over 1.25 lakh people in 100-plus countries and killing over 4,000.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X