Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாண்ட் படங்களுக்கு டேனியல்கிரேக் டாட்டா.. இவர்தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட்..இதுவாவது உண்மையா இருக்குமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: நோ டைம் டு டை படத்துக்கு பிறகு ஜேம்ஸ்பாண்டாக நடிக்க இருக்கும் நடிகர் பற்றிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
ஹாலிவுட்டில் வெளியாகும் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசைகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள்.
இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. பாண்ட் பட வரிசைகளில் அடுத்ததாக வர இருப்பது, நோ டைம் டு டை.
என்னதான் மகிழ்ச்சின்னாலும் இப்படியா? வைரலாகும் பிரபல நடிகையின் லிப் லாக் போட்டோ.. கடுப்பில் ஃபேன்ஸ்
ஷூட்டிங் முடிந்துவிட்டது
டேனியல் கிரேக், ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. தொடர்ந்து நான்கு பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரேக், இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார்.
இட்ரிஸ் எல்பா
அவர், கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலேஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்டர் ஆகிய பாண்ட் படங்களில் நடித்திருந்தார். இதனால், இட்ரிஸ் எல்பா என்ற நடிகர், பாண்ட் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பாண்ட் கேரக்டரில் நடிக்கும் முதல் கறுப்பின ஹீரோ அவர்தான் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவர் நடிக்கவில்லை என்று பின்னர் மறுக்கப்பட்டது.
கடைசி பாண்ட் படம்
இந்நிலையில், இதுதான் என் கடைசி பாண்ட் படம் என நடிக்கச் சம்மதித்தார் கிரேக். இவருக்கு அடுத்து ஜேம்ஸ் பாண்டாக நடிப்பது யார் என்று கேள்வி எழுந்தது. இதையடுத்து பல்வேறு நடிகர்களின் பெயர்கள் இதில் அலசப்பட்டன. அது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன.
லஷானா லின்ச்
இதற்கிடையே கேப்டன் மார்வல் படத்தில், நாயகியின் தோழியாக நடித்த லஷானா லின்ச் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது நடிகர் டாம் ஹார்டிதான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் என்ற செய்தி வெளியாகி பரபரப்பாகி இருக்கிறது. 43 வயதான டாம் ஹார்டி பிரிட்டனைச் சேர்ந்தவர்.
பியர்ஸ் பிராஸ்னன்
இன்செப்ஷன், மேட் மேக்ஸ் ஃபியூரி ரோட், த ரெவனன்ட், டன்கிரிக் படங்களின் மூலம் பிரபலமானவர். இவர் ஜேம்ஸ்பாண்டாக நடிப்பது பற்றி அதிகாரபூர்வ தகவல் வரவில்லை. அதனால் இதுவாவது உண்மையாக இருக்குமா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதுவரை ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர்களில் ஷான் கானரி, ஜார்ஜ் லேஸன்பை, ராஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.