'டாப் கன்' இயக்குனர் டோனி ஸ்காட் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை

By Siva

Tony Scott
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட். அவர் தனது சகோதரர் ரிட்லி ஸ்காட்டுடன் சேர்ந்து படங்களைத் தயாரித்தும் வந்தார். டாப் கன், தி டேக்கிங் ஆப் பெல்ஹம் 123 போன்ற பிரபல படங்களை இயக்கியவர். இந்நிலையில் அவர் கடந்த 19ம் தேதி மதியம் 12.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பெட்ரோ மாவட்டத்தில் உள்ள வின்சென்ட் தாமஸ் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிற்பகல் 3 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டது. பாலத்தில் நின்றிருந்த அவரது காரில் தனது குடும்பத்தாருக்காக கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தோனி டேவிட் ஸ்காட் கடந்த 1944ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆப் ஆர்டில் படித்த அவர் தனது சகோதரர் ரிட்லி ஸ்காட்டுக்காக ஆயிரக்கணக்கான டிவி சீரீயல்களை இயக்கியுள்ளார். அவரது முதல் ஹாலிவுட் படமான 'தி ஹங்கர்' எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதையடுத்து 3 ஆண்டுகள் கழித்து அவர் எடுத்த 'டாப் கன்' படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அவர் கிரிம்சன் டைட், எனிமி ஆப் தி ஸ்டேட் மற்றும் மேன் ஆப் பையர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அவர் டாப் கன் இரண்டாம் பாகத்தை இயக்கவிருந்தார். மேலும் நார்கோ சப் என்ற படத்தை 2013ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் தான் அவர் திடீர் என்று தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே 2 முறை விவாகரத்தான அவருக்கு டான்னா வில்சன் ஸ்காட் என்ற மனைவியும், பிரான்க், மேக்ஸ் ஆகிய இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X