டோட்டல் டேமேஜ், ஹனிமூனில் ஒய்யார தூக்கம் போட்ட ஹாலிவுட் பிரபலம்: ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்

பிரான்ஸ்: 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயதார்த்தத்தோடு கசந்து போன ஹாலிவுட் பிரபலங்கள் தற்பொது திருமணம் செய்துள்ளனர்.

ஜெனிஃபர் லோபஸ் - பென் அஃப்லெக் டும் டும் டும் : 20 ஆண்டுகள் பிரேக் அப்பை வென்ற தெய்வீகக் காதல்

திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் பிரபலங்கள் ஹனிமூன் சென்றுள்ள நிலையில், அங்கு வேடிகையான சம்பவம் நடந்துள்ளது.

20 ஆண்டுகள் கடந்து திருமணம்

20 ஆண்டுகள் கடந்து திருமணம்

பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ் ஹாலிவுட் நடிகரும் தனது முன்னாள் காதலருமான பென் அஃப்லெக்கை 20 ஆண்டுகள் கடந்து திருமணம் செய்துள்ளார். 2002ம் ஆண்டில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த கையோடு, இருவரும் கைகுலுக்கி விடைபெற்றிருந்தனர். இந்த நிலையில், தற்போது காதல் ஜோடிகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.

முதல் காதல் முற்றிலும் கோணல்

முதல் காதல் முற்றிலும் கோணல்

2002ம் ஆண்டில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்திய 'Gigli' என்ற ஹாலிவுட் படத்தில் இணைந்து நடித்த ஜெனிஃபர் லோபஸ், பென் அஃப்லெக், தொடர்ந்து 'Jersy Girl' படத்திலும் ஜோடி சேர்ந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் துளிர்விட, அது நிச்சயதார்த்தத்தில் முடிந்தது. ஆனாலும், திடீரென இருவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்றனர்.

புதிய பாதை

புதிய பாதை

அதே ஆண்டில் ஜெனிஃபர் லோபஸ் மார்க் ஆண்டனியையும், பென் அஃப்லெக் 2005ல் ஜெனிஃபர் கார்னரையும் மணமுடித்துக் கொண்டு புதிய பாதையில் பயணித்தனர். ஆனாலும், இந்த வித்தியாச திருமணங்கள் சில வருடங்களிலேயே தீயில் கருகிய சருகாய் பொசுங்கிவிட, மீண்டும் இருவரும் தனிமையில் வாடி வந்தனர்.

இணைந்த கைகள்

இணைந்த கைகள்

இதனைத் தொடர்ந்து பென் அஃப்லெக், பிரபல ஹாலிவுட் நடிகையான ஆனா டி ஆர்ம்ஸுடன் டேட்டிங்கில் பிஸியாக இருந்தார். ஆனாலும் அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் பிரிந்தனர். இந்த நிலையில், 52 வயதான ஜெனிஃபர் லோபஸுக்கும், 49 வயதான பென் அஃப்லெக்கும் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் திருமணம் நடைபெற்றது. 20 வருடங்களுக்குப் பிறகு திருமணத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலங்களை, ரசிகர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

ஹனிமூனில் தூக்க கலக்கம்

ஹனிமூனில் தூக்க கலக்கம்

இதனையடுத்து நட்சத்திரத் தம்பதிகளான ஜெனிஃபர் லோபஸும், பென் அஃப்லெக்கும் பிரான்ஸ் நாடின் பாரீஸ் நகரில் உள்ள செய்னி நதியில், சொகுசு கப்பலில் சென்று ஹனிமூன் கொண்டாடத் தயாராகினர். இங்கே தான் அந்த தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நாற்காலியில் அமர்ந்திருந்த பென் அஃப்லெக், ஹனிமூன் கொண்டாட்டத்தை மறந்து அசந்து தூங்கிவிட்டார். இந்த போட்டோ வைரலாக, நெட்டிசன்களும் அவரை ரவுண்டு கட்டி ரவுசு காட்டுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X