பிரபல நடிகர் தனது காதலியுடன் மர்ம மரணம்.. வீட்டுக்குள் பிணமாகக் கிடந்தனர்.. உறவினர்கள் அதிர்ச்சி!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல நடிகர் தனது காதலியுடன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேத்தரின் ஹார்ட்விக்கி இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம், ட்விலைட்.

கிரிஸ்டன் ஸ்டிவர்ட், ராபர்ட் பேட்டின்சன், பில்லி பர்க் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் ஹிட்டானது.

 அமெரிக்க நடிகர்

அமெரிக்க நடிகர்

இந்தப் படத்தில், டைலர் கிராவ்லி என்ற கேரக்டரில் நடித்திருந்தவர், பிரபல அமெரிக்க நடிகர் கிரிகோரி டைரீ பாய்ஸ் (Gregory Tyree Boyce). வயது 30. இவர் லாஸ் வேகாஸில் உள்ள தனது வீட்டில், காதலி நடாலி அடேபோஜுவுடன் (Natalie Adepoju) தங்கி இருந்தார். இவருக்கு வயது 27. கடந்த 13 ஆம் தேதி இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றிருக்க வேண்டும்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

ஆனால் செல்லவில்லை. அவர் கார் வெளியே நிற்பதைக் கண்ட பாய்ஸின் உறவினருக்கு ஆச்சரியம். சந்தேகம் அடைந்த அவர், பாய்ஸின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஷாக் ஆனார். பாய்ஸும் அவர் காதலியும் உயிரிழந்த நிலையில் அங்கு கிடந்தனர். இதனால் பதட்டமடைந்த அவர், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

 மர்ம மரணம்

மர்ம மரணம்

விரைந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. வீட்டில் இருந்து வெள்ளை பவுடர் போன்ற பொருளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த மர்ம மரணம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பரபரப்பு

பரபரப்பு

இந்நிலையில், தனது அம்மாவை பார்ப்பதற்காகவும் அவருக்கு உதவுவதற்காகவும் பாய்ஸ், லாஸ் வேகாஸுக்கு வந்தார் என்றும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றிருக்க வேண்டிய நிலையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 நடிகர்கள் இரங்கல்

நடிகர்கள் இரங்கல்

மறைந்த நடிகர் பாய்ஸிக்கு ஏற்கனவே 10 வயதில், மகள் ஒருவர் இருக்கிறார். நடிகரும் அவர் காதலியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் நடிகர், நடிகைகள் அவரது மறைவுக்கு, சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X