உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட்டின் யூனிவர்சல் ஸ்டூடியோ… ஜூலை திறப்பு !
கலிபோர்னியா : அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான யூனிவர்சல் ஸ்டூடியோ ஜூலை மாதம் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் பேசும் பொருளாக இருப்பது கொரானா என்ற ஒற்றை வார்த்தை. இந்த ஒற்றை வார்த்தை பல தொழில்களையும் பல இடங்களையும் மூடச்செய்துள்ளது.
தற்போது கொரோனாவின் பாதிப்பு அங்கே குறைந்து உள்ளதால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளுடன் யூனிவர்சல் ஸ்டூடியோ திறக்கப்பட உள்ளது.

ஜுராசிக் பார்க்
யூனிவர்சல் ஸ்டூடியோஸ் இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படப் படப்பிடிப்பு நிறுவனமாகும். இதன் தலைமையகம் யூனிவர்சல் சிட்டி கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் முக்கிய 6 திரைப்படப்பிடிப்பு நிறுவனத்தில் இதுவும் ஒன்றாகும். யூனிவர்சல் ஸ்டூடியோவில் பல முக்கிய பல முக்கியத் திரைப்படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டுள்ளன அதில் நமக்கு மிகவும் பரிச்சயமான படம் ஜுராசிக் பார்க் இங்குதான் எடுக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு வெளியானது.

பார்க் முடக்கம்
இந்த தீம் பார்க் கொரானா தொற்று பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த தீம் பார்க் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொற்று பரவலின் வீரியம் காரணமாக தீம் பார்க் திறக்கப்படாமல் அப்படியே மூடியே கிடந்தது.

கட்டுப்பாடுகளுடன் திறப்பு
ஜூலை மாதம் இது மீண்டும் திறக்கப்படும் என்றும் அப்போது சில கடுமையான கட்டுப்பாடுகளுடன் வழிநடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது இங்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், ஒவ்வொருவரின் உடல்நிலை வெப்பம் சரிபார்க்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் . மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மக்கள் தவிப்பு
திரைப்படப் பிடிப்பு தளமும், தீம் பார்க்கும் ஒருசேர அமைந்த இந்த பகுதி அங்கு மிகவும் பிரபலமானது. இங்கு பல லட்சம் மக்கள் தினமும் வந்து போகின்றனர். அந்த நிறுவனத்திற்கு பல லட்சம் கோடி வருமானம் வந்து கொண்டிருந்த வேளையில் இப்போது பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் மக்களும், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாதுகாப்பு முக்கியம்
இந்த பார்க் வெகு நாட்களுக்குப் பிறகு ஜூலை மாதம் மீண்டும் திறக்கப்படும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலை மீண்டும் வைரஸ் தொற்று வராமல் தவிர்க்க மேலும் உயிரிழப்புகள் எதுவும் நடக்காமல் மனித குலத்தைக் காக்க நாம் ஒன்றிணைந்து இந்த சில கட்டுப்பாட்டு விதிகளை தவறாமல் சில காலங்களுக்கு பின்பற்றித்தான் ஆகவேண்டும்.


Click it and Unblock the Notifications











