twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்க பாப் பாடகி ஜெஸிகா சிம்ப்சனுடன் உட்ஸுக்குத் தொடர்பு?

    By Staff
    |

    Jessica
    அமெரிக்க பாப் பாடகி ஜெஸிகா சிம்ப்சனுடனும், டைகர் உட்ஸுக்கு செக்ஸ் தொடர்பு இருப்பதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

    உட்ஸுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ள முதல் முக்கியப் பிரபலம் இவர்தான். இதற்கு முன்பு ஏகப்பட்ட பெண்களுடன் உட்ஸைத் தொடர்புப்படுத்தி செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் பார்கள், ஹோட்டல்களில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் விபச்சாரப் பெண்கள்தான்.

    ஆனால் முதல் முறையாக முக்கியப் பிரபலத்துடன் உட்ஸைத் தொடர்புப்படுத்தி செய்தி வந்துள்ளதால் உட்ஸ் விவகாரம் பெரும் பரபரப்படைந்துள்ளது.

    கவர்ச்சிகரமான பாப் பாடகியான ஜெஸிகா, கடந்த ஜூலை மாதம் நடந்த கோல்ப் போட்டியின்போது அமெரிக்க தேசியக் கீதத்தைப் பாடினார். அந்த நிகழ்ச்சியில்தான் முதல் முறையாக உட்ஸும், ஜெஸிகாவும் சந்தித்துக் கொண்டனராம். இது பழக்கமாகி நெருக்கமாகி விட்டார்களாம்.

    29 வயதாகும் ஜெஸிகா, அந்த கோல்ப் நிகழ்ச்சியில் தனது காதலரான கால்பந்து வீரர் டோனி ரோமோவுடன் பங்கேற்றாராம். இருப்பினும் உட்ஸை சந்தித்த எட்டு நாட்களுக்குப் பின்னர் ரோமோவை கழற்றி விட்டு விட்டாராம் ஜெஸிகா.

    தேசிய கீதம் பாடிய ஜெஸிகாவைப் பார்த்து டைகர் உட்ஸ் மெய் மறந்து போனாராம். தான் அவரை விரும்பும் செய்தியையும் அவர் ஜெஸிகாவுக்கு உடனடியாக அனுப்பி வைத்தாராம்.

    மேலும் அந்த நிகழ்ச்சியின்போது ஜெஸிகாவின் இடுப்பைச் சுற்றி தனது கைகளைப் போட்டபடி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தாராம் உட்ஸ்.

    இதுகுறித்து ஜெஸிகா தரப்பு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. அதேசமயம், ஜெஸிகாவுக்கும், உட்ஸுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று ஜெஸிகாவின் நட்பு வட்டாரம் ஒன்று கூறுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X