twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2வது முறையும் வசமா சிக்கிட்டாரு...பாலியல் வழக்கில் அமெரிக்க பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டு சிறை

    |

    நியூயார்க் : பாலியல் வழக்கில் 55 வயதாகும் அமெரிக்க பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இசை உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமெரிக்க பாடகர் கெல்லி, தன்னிடம் பயிற்சிக்கு வரும் குழந்தைகள் உள்ளிட்ட இளம் ரசிகர்கள், பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், அவர்களை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஏராளமானோர் இவர் மீது 2008 ம் ஆண்டு முதலே குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தனர்.

    US singer R Kelly sentenced to 30 years in sex trafficking case

    பல ஆண்டுகளாக அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பி வந்தார். இந்நிலையில் தற்போது அதிகமானவர்கள் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கெல்லி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 100000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்ததுடன், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம் தீர்ப்பிற்காக கெல்லி கோர்ட்டிற்கு வந்த போது, கோர்ட் வாசலில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவர் மீது பகிரங்கமாக பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். ஆனால் அப்போது எந்த சலனமும் இல்லாமல், கைகளை கட்டிக் கொண்டு, தலையை குனிந்தபடி நின்றிருந்தார் கெல்லி. தீர்ப்பு வாசிக்கப்பட்ட போதும் கெல்லி, எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தார்.

    US singer R Kelly sentenced to 30 years in sex trafficking case

    ஆனால் கோர்டிற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள், சிறு வயதில் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளின் போது தாங்கள் விபரம் புரியாமல், சூழ்நிலையை எப்படி கையாள்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். இந்த 30 வருட சிறை தண்டனை நீதித்துறை மீதான தங்களின் நம்பிக்கையை அதிகரிக்க வைத்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் கேட்டால் இது போதாது. இது குறைவான தண்டனை என்றே சொல்கிறார்கள்.

    இந்த தீர்ப்பால் கெல்லி மிகுந்த மன வேதனையில் இருப்பதாக கெல்லியின் வழக்கறிஞர் ஜெனிஃபர் போன்ஜியன் கூறி உள்ளார். அவரும் சாதாரண மனிதர் தான். மற்றவர்களை போல் அவருக்கும் உணர்வு உண்டு. கோர்ட் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று தான் அவர் அமைதியாக உள்ளார். அமைதியாக இருப்பதால் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

    பாலியல் தொந்தரவு, ஆள் கடத்தல், மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கெல்லி மீது பல வழக்குகள், பல ஆண்டுகளாக தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளால் ஏற்கனவே கெல்லி கைது செய்யப்பட்டு 2019 வரை ஜாமின் இல்லாமல் சிறையில் இருந்தார். அவர் வெளியில் வந்த பிறகும் தொடர்ந்து வழக்குகள் விசாரிக்கப்பட்டது. கெல்லிக்கு எதிரான பல வழக்குகளில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த வழக்குகளின் விசாரணை ஆகஸ்ட் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிப்பு பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிப்பு

      English summary
      US singer R Kelly was sentenced to 30 years in prison in the sexual abuse case. In september, the fallen superstar was found guilty on all nine charges he faced, including the most serious of racketeering.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X