ஒரு படத்திற்கு எப்படியெல்லாம் புரமோஷன் பண்றாங்க பாருங்க...!
லாஸ் ஏஞ்சலெஸ்: ஒரு படத்திற்கான புரமோஷனை எப்படியெல்லாம் களேபரமாக்க முடியுமோ, அந்த அளவுக்கு களேபரப்படுத்த சினிமாக்காரர்கள் தயங்குதில்லை. ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி. இதில் எல்லோருமே ஒன்றுதான்.
சமீபத்தில் ஹாலிவுட்டில், ஒரு படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியின்போது படத்தின் நாயகி வெனீசா ஹட்ஜன்ஸ் அணிந்து வந்த ஆடை அத்தனை பேரையும் குலுங்க வைத்து விட்டது. காரணம், அதில் தெரிந்த கவர்ச்சி.
கவர்ச்சியுடன் வலம் வந்த வெனீசா படபுரமோஷனையே ஒரு மாதிரியாக மாற்றி விட்டார்.

ஸ்பிரிங்ஸ் பிரேக்கர்
இதுதான் வெனீசா நடித்துள்ள லேட்டஸ்ட் படமாகும். இந்தப் படத்துக்கான புரமோஷனில்தான் வெனீசா தற்போது பிசியாக இருக்கிறார்.

கவர்ச்சி உடையில் கிம்மல் ஸ்டுடியோஸில்...
ஹாலிவுட்டின் கிம்மல் ஸ்டுடியோஸில் நடந்த பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த அவரைப் பார்த்து அனைவரும் விதிர்த்து விட்டனர். காரணம் அவரது உடை.

முன்னழகை முழுசாக
இந்த நிகழ்ச்சிக்காக அவர் அணிந்திருந்த ஜம்ப் சூட்டால், அவரது முன்னழகு கிட்டத்தட்ட முழுசாக தெரிந்தது. இதனால் அவரைச் சுற்றியே மீடியாக்களின் கேமராக்கள் மொய்த்தபடி நின்றன.

வெனீசாவுக்கே வெட்கம்
தான் அணிந்திருந்த உடையில் தான் மிகவும் கவர்ச்சிகரமாக தெரிவதை வெனீசாவும் உணர்ந்திருந்தார். மேலும் ஆடை மேலும் கீழிறங்கி விடுமோ என்ற அச்சமும் அவரிடம் காணப்பட்டதை உணர முடிந்தது. இருந்தாலும் அவரை அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் படு கூலாகவே காணப்பட்டார்.

குவிந்த ரசிகர்கள் - புன்னகையுடன் ஆட்டோகிராப்
வெனீசாவைப் பார்க்க ரசிகர்களும் குவிந்துவிட்டனர். அவர்களுக்கு சளைக்காமல் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்து புகைப்படமும் எடுக்க அனுமதித்து அவர்களைக் குளிர்வித்தார் வெனீசா.


Click it and Unblock the Notifications











