Venom 3: ஆரம்பிக்கலாமா! அந்த குதிரை சீன் ஒண்ணு போதும்.. ’வெனம் 3’ டிரெய்லர் வேறலெவலில் மிரட்டுது!
லாஸ் ஏஞ்சல்ஸ்: டாம் ஹார்டி நடிப்பில் தாறுமாறாக உருவாகியுள்ள வெனம் 3 (Venom - The Last Dance) திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்பைடர்மேன் 3 படத்தில் பிளாக் ஸ்பைடர் என வெனம் கேரக்டர் இடம்பெறும். அதை வைத்து டாம் ஹார்டி தனியாக வெனம் படத்தில் நடித்தார். அதன் 3ம் பாகம் தற்போது வெளியாக காத்திருக்கிறது.
ரூபென் ஃபிளெட்சர் இயக்கத்தில் 2018ல் வெளியான வெனம் படத்தில் ஹீரோவாக டாம் ஹார்டி நடித்து அசத்தினார். வில்லத்தனமான வெனம் அவரது உடலுக்குள் செல்ல அதை வைத்து இவர் எப்படி ஹீரோயிசம் செய்கிறார் என்கிற கதையாக இந்த படம் உருவானது.

ஆண்டி செர்கிஸ் இயக்கத்தில் வெனம் 2 திரைப்படம் Venom: Let There Be Carnage என்கிற டைட்டிலில் வெளியானது. அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வேட்டை நடத்திய நிலையில், தற்போது 3ம் பாகம் இந்த ஆண்டு வெளியாக போகிறது.
டாம் ஹார்டி: ஹாலிவுட்டில் வில்லன் நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்து வந்த டாம் ஹார்டிக்கு சூப்பர் ஹீரோ படமாக வெனம் சீரிஸ் வெற்றியை தந்தது. அதன் 2 பாகங்களிலும் அசத்தியது போல 3ம் பாகத்திலும் டாம் ஹார்டி நடித்துள்ளார். இன்செப்ஷம், வாரியர், தி ரெவனண்ட், டன்கிர்க், மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து மாஸ் காட்டிய டாம் ஹார்டி வெனம் 3 படத்தில் வேறலெவல் ஸ்டன்ட் சீன்களில் நடித்து தெறிக்கவிட்டுள்ளார்.

2012 ஹீரோ: 12 இயர்ஸ் ஸ்லேவ், 2012 உள்ளிட்ட பல படங்களில் நடித்த சிவெடல் எஜியோஃபர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாம் ஹார்டியின் உடம்பில் இருக்கும் வெனமை அப்புறப்படுத்த அவரை வேட்டையாடும் சிவெடல் அதன் பின்னர் வெனம் வந்த கிரகத்திலிருந்து பல மோசமான உயிரினங்கள் பூமிக்கு வந்து தாக்க அதிலிருந்து வெனம் தான் நம்மை காப்பாற்றும் நினைக்கும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பது டிரைலர் மூலம் தெரிய வருகிறது.

குதிரை சீன்: ஆரம்பத்தில் லோக்கல் ரவுடிகளை வெனம் சாப்பிடும் காட்சியில் தொடங்கி வாட்டர் சீன் எல்லாம் வேறலெவலில் மிரட்ட படத்தின் ஹைலைட்டாக கடைசியில் வரும் அந்த குதிரை சீன் தாறுமாறாக உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த ஹாலிவுட் படம் வெளியாகிறது. தமிழ் டிரெய்லரை மிஸ் பண்ணாமல் கண்டு ரசியுங்கள்.


Click it and Unblock the Notifications











