“இரும்பு மனிதர் மைக் டைசனை நேருக்கு நேர் சந்தித்தபோது“... உருகிய விஜய்தேவரகொண்டா !

அமெரிக்கா : பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்தேவரகொண்டாவும் மைக் டைசனும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லைகர்

லைகர்

கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் லைகர். இதில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. தற்காப்புக் கலை, சண்டைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

குத்து சண்டை வீரராக

குத்து சண்டை வீரராக

குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார்.

அமெரிக்காவில் படப்பிடிப்பு

அமெரிக்காவில் படப்பிடிப்பு

இந்திய சினிமாவில் முதல் முறையாக சர்வதேச குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இறுதியில், அவரது கதாபாத்திரத்தை வைத்தே முக்கியமான திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் , விஜய்தேவரகொண்டாவும் மைக் டைசனும் அக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சி படமாக்கப்பட உள்ளது..

வாழ் நாள் பொக்கிஷம்

வாழ் நாள் பொக்கிஷம்

இந்நிலையில், விஜய்தேவரகொண்ட தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மனிதர் அன்பானவர். இவருடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு தருணமும் பொக்கிஷமாகும், அதுவும், இந்த தருணம், வாழ்நாள் பொக்கிஷமாக இருக்கும், இரும்பு மனிதர் மைக் டைசனுடன் நேருக்கு நேர் சந்தித்தபோது.... என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளை பெற்று இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X