»   »  பிளேபாய் அம்மா.. ஹாலிவுட் மகள்.. இடையில் சின்ன 'பிளாஷ்'..!

பிளேபாய் அம்மா.. ஹாலிவுட் மகள்.. இடையில் சின்ன 'பிளாஷ்'..!

By Sudha
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: அம்மா ஒரு முன்னாள் பிளேபாய் போஸ் 'கொடுப்பாளர்'.. மறுபக்கம் அடக்கம் ஒடுக்கமான அப்பா... இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட கனடாவின் கலக்கல் அழகியாக கருதப்படுபவரான பாலினா வேயன் கிரெட்ஸ்கி லாஸ் ஏஞ்சலெஸில் காட்டிய கவர்ச்சிதான் இப்போது கனடாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கனடாவின் பிரபலமான குடும்பம் இது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் பாலினா கிரெட்ஸ்கி. இவரது தந்தை கனடாவின் புகழ் பெற்ற முன்னாள் ஹாக்கி வீரர் ஆவார். மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் பாலினாதான் மூத்தவர். கவர்ச்சியிலும் இவர்தான் முன்னணியில் இருக்கிறார். ஹாலிவுட்தான் இவரது கனவாக இருக்கிறது.

இந்தக் கனவுடன் லாஸ் ஏஞ்சலெஸில் முகாமிட்டுள்ளார் பாலினா. அங்கு இவர் காட்டிய கவர்ச்சிதான் தற்போது கனடாவின் பேச்சாக மாறியுள்ளது.

24 வயதில் இம்புட்டு அழகா...

24 வயதில் இம்புட்டு அழகா...

பாலினாவுக்கு 24 வயது ஆகிறது. இந்த வயதுக்கேற்ற அழகு மட்டுமல்லாமல் கூடுதல் அழகு பிளஸ் கவர்ச்சியுடன் கலக்கி வருகிறார் பாலினா.

அம்மாவும் சும்மா இல்லை

அம்மாவும் சும்மா இல்லை

இவரது தாயார் ஜேனட் ஜோன்ஸ். இவரும் மகளுக்கு சற்றும் குறைவில்லாத அழகுடன் இப்போதும் திகழ்கிறார். இவர் பிளேபாய் இதழுக்கு முன்பு போஸ் கொடுத்த பெருமைக்குரியவரும் கூட.

இன்டர்நெட்டில் கவர்ச்சி போஸ்கள்

இன்டர்நெட்டில் கவர்ச்சி போஸ்கள்

பாலினா கடந்த ஆண்டு டிவிட்டரில் தனது கவர்ச்சிகரமான போஸ்கள் அடங்கிய புகைப்படங்களை உலா விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவை உடனடியாக எடிட் செய்யப்பட்டன. சில படங்களை டிவிட்டரே நீக்கியது.

இன்ஸ்டாகிராமிலும்...

இன்ஸ்டாகிராமிலும்...

இதையடுத்து சமீபத்தில் இன்ஸ்டாகிராமிலும் அவரது கவர்ச்சிப் படங்கள் சரமாரியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

நேரடியாகவே கவர்ச்சி காட்டிய பாலினா

நேரடியாகவே கவர்ச்சி காட்டிய பாலினா

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் அல்லாமல், நேரடியாகவே கவர்ச்சி மழை பொழிந்துள்ளார் பாலினா. லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஹாலிவுட் கிளப்புக்கு படு கவர்ச்சிகரமாக வந்ததோடு, கவர்ச்சிகரமான போஸும் கொடுத்து பரபரப்பைக் கிளப்பி விட்டுச் சென்றுள்ளார்.

நைட் கிளப்பில்...

நைட் கிளப்பில்...

ஹாலிவுட் நைட் கிளப்புக்கு வந்திருந்த பாலினா, சிவப்பு நிற உடையில் படு கவர்ச்சிகரமாக, தனது முன்னழகு தெரிய நடை போட்டார். அத்துடன் காரில் ஏறிப் போகும்போது தனது முன்னழகின் அழகை வேண்டும் என்றே காட்டியபடி கிளம்பிப் போனார்.

ஹாலிவுட் ஆசையில்

ஹாலிவுட் ஆசையில்

பாலினாவுக்கு ஹாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பதே பேராசையாக உள்ளதாம். இதனால்தான் இப்படியெல்லாம் வந்து போகிறார் என்று கூறுகிறர்கள்.

நம்மூரில் நடிக்க விரும்புவோர் கவர்ச்சி உடையுடன் பட விழாக்களுக்கு வந்து போவார்களே..அதுபோலத்தான் இதுவும் போல...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    She's he eldest of five children in Canada’s best-loved hockey family, but Paulina Gretzky - unlike her down-to-earth father - is very much the Hollywood blonde. The stunning 24-year-old takes after her mother, Janet Jones, who is equally blonde and beautiful and once posed for Playboy.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more