மிரட்டி ஓரல் செக்ஸ் வைத்தார், சுயஇன்பம் அனுபவித்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பல நடிகைகள் புகார் தெரிவித்ததுடன், வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
தற்போது வழக்கு தொடர்ந்துள்ள நடிகை தனது மனுவில் ஜேன் டோ என்று தனது பெயரை குறிப்பிட்டுள்ளார்.

பலவந்தம்
ஹார்வி வெயின்ஸ்டீன் வலுகட்டாயமாக தன்னிடம் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும், தன் கண் முன்பு மீண்டும் மீண்டும் சுயஇன்பம் அனுபவித்ததாகவும் அந்த நடிகை தெரிவித்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கெரியரை நாசமாக்கிவிடுவேன் என்று வெயின்ஸ்டீன் அந்த நடிகையை மிரட்டியுள்ளார்.

டார்ச்சர்
வெயின்ஸ்டீன் தன்னை மிரட்டியே 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த நடிகை கூறியுள்ளார். 2013ம் ஆண்டு வெயின்ஸ்டீனின் அலுவலகத்திற்கு சென்றபோது என்னை தரையில் தள்ளி உள்ளாடையை கழற்றிவிட்டு ஓரல் செக்ஸ் செய்தார். அதை நான் எதிர்த்து அழவே நடிகையாக வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டு மிரட்டினார் என்று நடிகை மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனிபர் லாரன்ஸ்
நடிகை ஜெனிபர் லாரன்ஸுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக வெயின்ஸ்டீன் பெருமை பேசினார். ஜெனிபர் நடிகையாக தான்
தான் உதவியாக வெயின்ஸ்டீன் தெரிவித்தார் என்று அந்த நடிகை கூறியுள்ளார். ஆனால் வெயின்ஸ்டீனுடன் தான் உறவு
கொள்ளவில்லை என்று ஜெனிபர் லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுயஇன்பம்
2013ம் ஆண்டு நடந்த சன்டேன்ஸ் திரைப்படவிழாவில் நான் வெயின்ஸ்டீனை முதன்முதலாக சந்தித்தேன். நான் அவரின் ஹோட்டல் அறைக்கு சென்றபோது பாத்ரூமை பயன்படுத்தினேன். அப்பொழுது அவர் உள்ளே வந்து தனது பேண்ட்டை கழற்றிவிட்டு சுயஇன்பம் அனுபவித்தார் என்று அந்த நடிகை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











