twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷங்கரின் "சிட்டி"யும்.. ஹிட்லரின் "ஸோம்பி"ப் படையும்!

    |

    கரீபியக் கடலோரம்... ஹைதி... குட்டித் தீவு.. மாயாஜாலமும், மந்திரவாதமும் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்கர்களின் பூமி. தனது வருங்கால கணவர் நீல் பார்க்கரைத் தேடி வருகிறார் மெடலின் ஷார்ட். திருமணக் கனவு கண்களில் டாலடிக்க, மனசு முழுவதும் பட்டாம்பூச்சி சிறகடிக்க, நாடி நரம்பெல்லாம் உற்சாகம் உடைப்பெடுக்க.. ஹைதிக்கு வருகிறார் மெடலின்.

    இதேபோல நீல் பார்க்கரும், மெடலினை மணக்கப் போகும் சந்தோஷத்துடன் ஹைதி வந்து சேருகிறார். இருவரும் இணைகிறார்கள். தாங்கள் தங்கப் போகும் இடத்திற்கு விரைகிறார்கள். வழியில் அவர்களை மர்டர் லெஜன்டிரே என்பவர் பார்க்கிறார். அவரது ஊமை விழிப் பார்வை இவர்கள் மீது பட்டுத் திரும்புகிறது.. லெஜென்டிரே ஒரு வூடூ மந்திரவாதி.

    நீல் பார்க்கரும், மெடலினும் பெரும் பண்ணைக்காரரான சார்லஸ் பியூமான்ட் என்பவரின் ஆடம்பர வீட்டுக்கு வந்து சேருகிறார்கள். அங்கு தங்குகிறார்கள். அப்போது சார்லஸுக்கு மெடலின் மீது ஒரு கண். பார்க்கரை காலி செய்து விட்டு மெடலினை அடையத் திட்டமிடுகிறார். இதற்காக லெஜன்டிரேவை அணுகுகிறார். அவரிடம் தனது விருப்பத்தைச் சொல்கிறார்.

    அதற்கு லெஜன்டிரேவும் சம்மதிக்கிறார். மெடலினுக்கு ஒரு பானத்தை அருந்தக் கொடுக்கிறார் சார்லஸ். அவரும் குடிக்கிறார். சில நாட்களில் மெடலின் - பார்க்கர் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில் மெடலின் திடீரென மரணமடைகிறார். அதிர்ச்சியில் சமைந்து போகிறார் பார்க்கர். மெடலின் உடலை புதைத்து அடக்கம் செய்கின்றனர். சோகத்தில் மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கிறார் பார்க்கர்.

    ஒரு நாள் இரவு

    ஒரு நாள் இரவு

    ஒரு நாள் இரவு.. கல்லறைத் தோட்டத்திற்கு செல்கிறார்கள் சார்லஸும், லெஜென்டிரேவும். அங்கு மெடலின் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டுகிறார்கள். உள்ளேயிருந்து மெடலின் உடலை வெளியே எடுக்கிறார்கள். அவருக்கு உயிர் கொடுக்கிறார் லெஜென்டிரே. மெடலினும் உயிர் பெற்று எழுந்து வருகிறார்... இப்போது மெடலின் ஒரு "ஸோம்பி".

    ஸோம்பி

    ஸோம்பி

    உண்மையில் மெடலின் இறக்கவில்லை.. மாறாக, அவரை உயிரிழந்தவர் போல மாற்றி விட்டார் லெஜென்டிரே. உயிரிழந்தவராக மாற்றி பின்னர் உயிர் கொடுத்து எழுப்புகிறார். ஆனால் இப்போது மெடலினிடம் உயிர் மட்டுமே உள்ளது. அவர் லெஜென்டிரேவுக்கு இப்போது அடிமை. லெஜென்டிரே சொல்வதையெல்லாம் மெடலின் செய்வார்... இதுதான் ஸோம்பிகளின் குணாதிசயம்.

    ஒயிட் ஸோம்பி

    ஒயிட் ஸோம்பி

    இது White Zombie என்ற ஹாலிவுட் படத்தின் கதையில் ஒரு பகுதி. 1932ம் ஆண்டு வெளியானது இப்படம். இதுதான் உலக அளவில் வெளியான முதல் ஸோம்பி ரக படமாகும்.

    ஹைதி ஸோம்பிகள்

    ஹைதி ஸோம்பிகள்

    அது என்ன ஹைதியில் கதைக் களம்..? ஸோம்பிகள் சினிமாவில் மட்டுமே நடமாடும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஹைதிதான் அதிக அளவில் ஸோம்பிகள் உள்ள பகுதி என்றும் சொல்கிறார்கள். இன்றும் கூட அங்கு நூற்றுக்கணக்கான ஸோம்பிகளைப் பார்க்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

    ஹாலிவுட் ஸோம்பிகள்

    ஹாலிவுட் ஸோம்பிகள்

    ஆனால் இந்த ஸோம்பிகளுக்கும், ஒயிட் ஸோம்பி படம் வந்த பிறகு வெளியான நூற்றுக்கணக்கான ஸோம்பி படங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் ஸோம்பிகள், வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதர்களாகத்தான் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். மிருதனிலும் கூட அப்படித்தான் வருகிறது.

    ஹைதி பானம்

    ஹைதி பானம்

    ஆனால் ஹைதியில் ஒரு பானத்தைக் கொடுத்து உயிரை நிறுத்தி வைத்து பின்னர் ஓடச் செய்வார்களாம் இந்த வூடூ மந்திரவாதிகள். இந்த பானம் குறித்து பலர் ஆராய்ச்சியும் செய்துள்ளனர். அதில் உடலின் அனைத்து ஓட்டத்தையும் இந்த பானம் தற்காலிகமாக நிறுத்தி விடுமாம். அதன் பின்னர் அதை மீண்டும் இயங்க வைத்து அந்த நபரை அடிமையாக்கி விடுகிறார்களாம் இந்த மந்திரவாதிகள்.

    நடைப்பிணமாகும் மனிதர்கள்

    நடைப்பிணமாகும் மனிதர்கள்

    பிணங்களை உயிர்ப்பித்து அதை நடைப்பிணமாக்கி அடிமையாக்குவது என்பது போல ஹாலிவுட் படங்களில் காட்டுவார்கள். ஆனால் உண்மையில் உயிருள்ள மனிதனையே நடைப்பிணமாக்கி தங்களது அடிமையாக்குவதுதான் ஸோம்பி என்கிறார்கள்.

    உணர்வில்லா மனிதர்கள்

    உணர்வில்லா மனிதர்கள்

    இவர்களுக்குப் பசிக்காது, உணர்ச்சி இருக்காது. என்ன சொன்னாலும் செய்வார்கள், எவ்வளவு வேலை கொடுத்தாலும் செய்வார்கள். பேச மாட்டார்கள். உயிர் இருக்கும், ஆனால் பிணத்திற்குச் சமமாக இருப்பார்கள், எந்த உணர்வும் இன்றி. இப்படிப்பட்டவர்கள்தான் ஸோம்பி மனிதர்கள்.

    கூலிப்படையினராக

    கூலிப்படையினராக

    இதுபோன்ற மனிதர்களை வைத்து ஹாலிவுட்டில் எக்கச்சக்கமான படங்கள் இதுவரை வந்து விட்டன. ரத்தம் குடிக்கும் மனிதர்களாக, கூலிப்படையினராக இவர்களை விதம் விதமாக சித்தரித்து விட்டது ஹாலிவுட்.

    ஹிட்லரின் ஸோம்பிகள்

    ஹிட்லரின் ஸோம்பிகள்

    ஹிட்லர் கூட ஒரு கட்டத்தில் ஸோம்பிகளைக் கொண்ட ஒரு மிகப் பெரிய படையை உருவாக்க முயற்சித்தாராம். கிட்டத்தட்ட எந்திரன் பட வில்லன் சிட்டி போல. ஆயிரக்கணக்கானோரை ஸோம்பிகளாக்கி அவர்கள் மூலம் நாசகார செயல்களை அரங்கேற்ற அவர் திட்டமிட்டிருந்தாராம். இதற்காக பெரிய மந்திரவாதிகள் கூட்டத்தையும் கூட்டி வைத்து ரகசியமாக வேலைகளைச் செய்து வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

    ஆசியாவின் முதல் ஸோம்பி

    ஆசியாவின் முதல் ஸோம்பி

    இதுவரை ஹாலிவுட்டை மட்டும் வலம் வந்து கொண்டிருந்த ஸோம்பிகள் இப்போது தமிழுக்கும் வந்துள்ளனர். ஆசிய அளவில் வெளியான முதல் ஸோம்பி படம் என்ற பெருமை 2000மாவது ஆண்டு வெளியான வெர்சஸ் படத்திற்கு உண்டு. இதில் சாமுராய்களையே ஸோம்பிகளாக்கி அசத்தியிருப்பார்கள்.

    English summary
    Zombie movies are turing their round in Tamil through Miruthan, here is a history of such films in Hollywood and others.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X