ஹாலிவுட்டில் அதிக சம்பளம் நடிகைகள்: முதலிடத்தில் ஏஞ்சலீனா ஜோலி
நியூயார்க்: உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் குறித்து சமீபத்தில் நியூயார்க்கில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் இந்திய மதிப்பில் சுமார் 180ரூபாய் சம்பளம் பெறும் ஏஞ்சலீனா ஜோலி முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

ஏஞ்சலீனா ஜோலி முதலிடம்...
38 வயதாகும் ஏஞ்சலீனா ஜோலியின் வருமானம் 33 மில்லியன்களாம். அது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 185 கோடி ரூபாய்க்குச் சமம். ஏஞ்சலீனா ஜோலி சமீபத்தில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொண்டார். இவரது நடிப்பில் உருவான ‘மேல்பிசியன்ட்' அடுத்தாண்டு வெளியாகும்.

ஜெனிபர் லாரன்சு 2 வது இடம்...
ஏஞ்சலீனா ஜோலிக்கு அடுத்த இடத்தில் 26 மில்லியன் டாலர் வருமானத்துடன் ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சு உள்ளார். இவரது சம்பளம் இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாய் ஆகும்.

கிறிஸ்டின் ஸ்டுவார்டு 3வது இடம்...
3-வது இடத்தை 22 மில்லியன் டாலர் (ரூ.125 கோடி) வருமானத்துடன் நடிகை கிறிஸ்டின் ஸ்டுவார்டும் பெற்றிருக்கிறார்.

ஜூலியாக்கு 9வது இடம்...
4வது இடத்தில் 16 மில்லியன் டாலர்களோடு எம்மா ஸ்டோனும், 11 மில்லியன் டாலர் வருமானத்தோடு ஜூலியா ராபர்ட் 9 வது இடத்திலும் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











