அச்சச்சோ அவர் டிரெஸ்ஸே போடமாட்டாரே.. தனுஷ் உடன் நடிக்கப்போறாரா சிட்னி ஸ்வீனி.. ஹாலிவுட் சம்பவம்!

சென்னை: நடிகர் தனுஷ் லண்டனில் திறக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் நிகழ்ச்சிக்கு சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் அனலை கிளப்ப ஆரம்பித்த நிலையில், அதைவிட புயலாக ஒரு தகவல் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

ஏற்கனவே பிரெஞ்சு படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியான தி கிரேமேன் படத்தில் ரியான் காஸ்லிங் மற்றும் கிறிஸ் எவான்ஸ் உடனே இணைந்து நடித்து விட்டார் தனுஷ்.

dhanush sydney sweeney hollywood

இந்நிலையில், மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ் லீடு ரோலில் நடிக்கப் போகும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் படம் உருவாகப் போவதாக தாறுமாறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும், அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடி இந்த யங் சென்சேஷனல் நடிகையா என பலரும் பொசுங்கி வருகின்றனர்.

மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்: தமிழில் இட்லி கடை, தெலுங்கில் குபேரா இந்தியில் Tere Ishk Mein என ஆல் இந்தியாவிலும் படங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் தனுஷ் ஹாலிவுட்டில் சோனி நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் நடிக்கப் போவதாகவும் பாக்ஸர் ஒருவரின் பயோபிக் படமாக இது உருவாகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிட்னி ஸ்வீனி தான் ஹீரோயினாம்: நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி ஸ்ட்ரீட் ஃபைட்டர் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 27 வயதாகும் சிட்னி ஸ்வீனி ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என ஏற்கனவே உலகளவில் தனது ஹாட்னஸ் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush sydney sweeney hollywood

ஈஃபோரியா வெப்சீரிஸ் சம்பவம்: ஸ்பைடர்மேன் நடிகர் டாம் ஹாலண்டின் காதலியும் நடிகையுமான ஜெண்டாயா நடிப்பில் வெளியான ஈஃபோரியா வெப்சீரிஸில் எல்லாம் பல காட்சிகளில் ஆடையே இல்லாமல் நிர்வாணக் கோலத்திலேயே படுக்கையறை காட்சிகளில் நடித்து பதற வைத்து இருப்பார் சிட்னி ஸ்வீனி. ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், பிக் டைம் அடலசன்ஸ், மேடம் வெப், நைட் டீட், ரியாலிட்டி என பல படங்களில் நடித்துள்ள சிட்னி ஸ்வீனி, ஹீரோஸ், கிரே அனாடமி, எவ்ரிதிங் சக்ஸ், ஷார்ப் ஆப்ஜெக்ட்ஸ், ஈஃபோரியா, தி ஒயிட் லோட்டஸ், ரோபோட் சிக்கன் உள்ளிட்ட பல வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். ஸ்ட்ரீட் ஃபைட்டர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஆனால், ஹாலிவுட்டில் தனுஷ் மற்றும் சிட்னி ஸ்வீனி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் தனுஷ் கமிட் ஆனால், படம் தாறுமாறான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

விவாகரத்துக்குப் பின்னர்: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் இயக்குநராக அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை என தனுஷ் இயக்கி வரும் நிலையில், நடிப்பில் அதே அளவுக்கு கவனத்தையும் வேகத்தையும் செலுத்தி வருகிறார் எனக் கூறுகின்றனர். குபேரா திரைப்படம் வெளியானால் 200 கோடி வரை வசூல் செய்யும் என்றும் அதற்கு மேலும், பெரிய வெற்றியடைய வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X