தனது மகளுக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்தது ஏன்..? பிரபல ஹாலிவுட் நடிகர் இப்படியொரு விளக்கம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது மகளுக்கு இந்தியா என்று ஏன் பெயர் வைத்தோம் என்பதை பிரபல ஹாலிவுட் ஹீரோ தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்து இவர், ஸ்டார் டிரெக் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இப்போது ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவருக்கு இன்று 37 வது பிறந்தநாள்.

அவென்சர்ஸ்
நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தை நீங்கள் பல புகழ்பெற்ற படங்களில் பார்த்திருக்க முடியும். தோர், அவென்சர்ஸ், ரஷ், தோர்: த டார்க் வேர்ல்ட், அவென்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான், அவென்சர்ஸ்: இன்பினிடி வார், அவென்சர்ஸ்: த எண்ட் கேம், மென் இன் பிளாக்: இன்டர்நேஷனல் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக எக்ஸ்ட்ராக்சன் (Extraction)என்ற படத்தை நடித்து தயாரித்தார்.

அதிக சம்பளம்
கடந்த ஏப்ரல் மாதம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இந்தப் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ஹெம்ஸ்வொர்த். இதுபற்றிய தகவலை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகையில் 2014, 2015, 2018 ஆம் ஆண்டுகளில் இடம்பிடித்திருந்தார். இவர், நடிகை எல்சா படாகி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்தியா ரோஸ்
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு 'இந்தியா ரோஸ்' என்று பெயர் வைத்துள்ளார். தன் குழந்தைக்கு ஏன் இந்தியா என்று பெயர் வைத்தோம் என்பதை தெரிவித்துள்ளார். 'என் மனைவி அதிக நாட்கள் இந்தியாவில் செலவழித்தவர். அதனால் அந்த பெயரை எங்கள் மகளுக்கு முதலில் வைத்து பிறகு ரோஸை சேர்த்துக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்
இவரது எக்ஸ்ட்ராக்சன் படத்தின் ஷூட்டிங், இந்தியாவில் அகமதாபாத்திலும் மும்பையிலும் நடந்தது. அப்போது, இங்குள்ள மக்கள் அன்பானவர்கள், தினமும் படப்பிடிப்பைப் பார்க்க ஏராளமானவர்கள் வருவார்கள். அந்த அனுபவத்தை நான் செட்டில் பெற முடியாது. மக்களின் அன்பையும் அந்த இடங்களையும் நான் நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











