twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா?

    |

    இரண்டு ஆஸ்கர்களை வென்ற ஃப்ரோஸன் அனிமேஷன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் நவம்பர் 22ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் இந்தியாவிலும் வெளியாகிறது.

    நியூயார்க்: டிஸ்னி தயாரிப்பில் கடந்த 2013ம் ஆண்டு ஃப்ரோஸன் திரைப்படம் வெளியானது. சுமார் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'ஃப்ரோஸன் 2' உலகம் முழுவதும் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாகிறது.

    Why Did Frozen Need A Sequel?

    ஆஸ்கர் விருது வென்ற ஃப்ரோஸன் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களே இதன் இரண்டாம் பாகம் உருவாக காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இசைப்பிரியர்களுக்கு விருந்து வைக்கும் அளவிற்கு இசைக்காவியமாக இந்த அனிமேஷன் திரைப்படம் உருவாகி இருந்தது. உலகளவில் ஆன்னா மற்றும் எலிசா கதாபாத்திர பெயர்களை பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டினர். மேலும், பார்பி பொம்மைகளுக்கு இணையாக ஆன்னா மற்றும் எலிசாவின் பொம்மைகளும் விற்பனை ஆகி வருகின்றன.

    தங்கையின் காதலை பொறுக்க முடியாத அக்கா எலிசா தனது ராஜ்யத்தையே உறைய வைத்து விட்டு போக, சூர்ய ஒளியை கொண்டு வர ஆன்னா போராடுவதும் இறுதியில் அக்காவை சந்தோஷப்படுத்தி ராஜ்யத்தை காப்பாற்றுவதுமாக சுபம் போட்டு முடிக்கப்பட்ட ஃப்ரோஸன் கதைக்கு ஏன் இரண்டாம் பாகம் தேவைப்படுகிறது என்ற கேள்விக்கு அந்த படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான ஆஸ்கர் விருது வென்ற பெண் இயக்குநர் ஜெனிஃபர் லீ பதிலளித்துள்ளார்.

    ஃப்ரோஸனில் சந்தோஷமாக எலிசா இருப்பது போன்று முடிக்கப்பட்டிருக்கும். அந்த சந்தோஷ நாளின் அடுத்த நாள் எப்படி தொடங்குகிறது என்ற புள்ளியில் தான் ஃப்ரோஸன் 2 படத்தின் கதை இருக்கும் என கூலாக பதிலளித்துள்ளார் ஜெனிஃபர் லீ.

    அதுமட்டுமின்றி இந்த இரண்டாம் பாகத்தில் எலிசா மற்றும் ஆன்னாவின் பெற்றோர்கள் கப்பலில் எங்கே சென்று கொண்டு இருந்த போது அந்த கப்பல் விபத்து ஏற்பட்டது என்பது குறித்தும், அனைத்திற்கும் மேலாக, எப்படி பிறக்கும் போதே எலிசாவுக்கு இந்த மாயாஜால சக்தியான உறைய வைக்கும் சக்தி கிடைத்தது என்ற சூப்பர் விஷயத்தை பார்க்க நிச்சயம் ரசிகர்கள் ஃப்ரோஸன் 2 படத்திற்கு வருவார்கள் என இயக்குநர் மெர்சல் காட்டியுள்ளார்.

    எல்சா மற்றும் அன்னாவை தவிர இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ஆணழகனான மவுன்ட்டெயின் மேன் கிரிஸ்டோஃப், எல்சாவும், அன்னாவும் சிறு வயதில் செய்த பனிபொம்மை ஓலாஃப் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கும் உலகளவில் ரசிகர்கள் ஏராளம் என்றும், அவர்களின் வாழ்க்கை பயணம் குறித்து மேலும் பல புதுமைகள் இந்த இரண்டாம் பாகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் பீட்டர் டெல் வெச்சோ கூறியுள்ளார்.

    இந்த படத்தின் இன்னொரு இயக்குநரான கிரிஸ் பக், இரண்டாம் பாகத்தில் எல்சாவுக்கு ஒரு அசரீரி குரல் கேட்டுக் கொண்டே இருக்கும் என்றும், அந்த குரல் சொல்லும் விஷயங்களை எல்சா செய்ய முயல்வதும் அதனால், ஏற்படும் விளைவுகளும் அதை ஆன்னா எப்படி சமாளித்து தனது பாசமான சகோதரியை பேராபத்தில் இருந்து மீட்கிறார் போன்ற விஷயங்கள் இருப்பதாக பல தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

    இதுபோன்ற பல மிரள வைக்கும் காரணங்களுக்காக ஃப்ரோஸன் 2 திரைப்படத்தை வரும் நவம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் காணலாம். இந்த படத்தின் இந்தி வெர்ஷனுக்காக பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது தங்கை பரிணித்தின் சோப்ரா குரல் கொடுத்துள்ளனர்.

    English summary
    Frozen, the 2013 animated musical fantasy film, was a global superhit. It redefined love, re-told the fairytale and shook up the traditional notions of a heroine.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X