Don't Miss!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- News
மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகிறது.. எங்கெல்லாம் தெரியுமா?
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் வாழ்க்கை திரும்ப கிடைச்சிடுச்சு.. சந்தோஷப்பட்ட ஜானி டெப்.. பழையபடி பட வாய்ப்புகள் குவியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க நீதிமன்றத்தில் அதிகப்படியாக நடிகர் ஜானி டெப் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது உலகளவில் டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
ஜஸ்டிஸ் ஃபார் ஜானி டெப் என கடந்த சில ஆண்டுகளாகவே ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.
முன்னாள் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கில் ஜானி டெப்புக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், மீண்டும் பழையபடி ஜானி டெப்புக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஜானி டெப்புக்கு கிடைத்தது வெற்றி.. முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டுக்கு கிடைத்தது என்ன தெரியுமா?

என் வாழ்க்கை திரும்ப கிடைச்சிடுச்சு
அவதூறு வழக்கில் நடிகர் ஜானி டெப்புக்கு பெரும்பான்மையான ஆதரவோடு நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், "என் வாழ்க்கையை நீதிபதி திரும்ப கொடுத்துட்டாரு" எனக் கூறி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார் நடிகர் ஜானி டெப். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏகப்பட்ட சிக்கல்களையும் தொழில் இழப்புகளையும் சந்தித்து இருந்தார் ஜானி டெப்.

அதிரடி நீக்கம்
2003ம் ஆண்டு முதல் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் ஜேக்ஸ் பேரோவாக நடித்து வந்து சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இதுவரை வெளியான 5 பாகங்களிலும் அவர் தான் கேப்டன் ஜேக்ஸ் பேரோ. ஆனால், ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக அவர் வழக்கு தொடுத்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 6வது பாகத்தில் இருந்து ஜானி டெப் அதிரடியாக நீக்கப்பட்டார்.

22.5 மில்லியன் டாலர் இழப்பு
அந்த படத்தில் நடித்திருந்தால் ஜானி டெப்புக்கு 22.5 மில்லியன் டாலர் சம்பளம் கிடைத்திருக்கும் என்றும் ஆனால், இந்த அவதூறு வழக்கு காரணமாக அவருக்கு அத்தனை பெரிய தொகை கிடைக்காமல் போனது மிகப்பெரிய இழப்பாக மாறியது என்றும் ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் நஷ்டம்
விவாகரத்து செய்து விட்டு பிரிந்து இருவரும் அமைதியாக வாழ்ந்திருந்தால் எந்தவொரு இழப்பும் இருவருக்குமே ஏற்பட்டு இருக்காது என்றும், மாறாக நீயா நானா என பார்த்து விடலாம் என நீதிமன்றத்தில் ஒருவரை ஒருவர் டேமேஜ் செய்ததன் விளைவாக இருவருக்கும் அவர்களது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

பட வாய்ப்புகள் குவியுமா
ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில், மீண்டும் பழையபடி பட வாய்ப்புகள் குவியுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிக போதைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு உடல் நலத்தை பேணாத நிலையில், பிரம்மாண்ட படங்களில் முன்பை போல ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைப்பது சந்தேகம் தான் என்றும் தன்னை பழைய பன்னீர்செல்வமாக அவர் மாற்றிக் கொண்டால் தான் ஹாலிவுட்டில் ஹீரோவாக நடிக்க முடியும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெல் கிப்சன், மர்லன் பிராண்டோ
பிரபல ஹாலிவுட் நடிகர்களான மர்லன் பிராண்டோ மற்றும் மெல் கிப்சன் போன்றவர்களும் இதுபோன்ற நீதிமன்ற வழக்குகளை சந்தித்து பின்னர் சினிமாவிலும் மிகப்பெரிய அளவில் சாதித்துள்ளனர். ஜானி டெப் பெரும் நம்பிக்கையுடன் அப்படியொரு வார்த்தையை கூறியுள்ள நிலையில், இந்த கான்ட்ரவெர்சி மற்றும் அவருக்கு ஆதரவளித்துள்ள ரசிகர்களை மனதில் கொண்டு கூட சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர்.