ஒய் திஸ் கொலவெறி.. கோல்ஃப் ஸ்டிக்கால் வில் ஸ்மித் பல்லை உடைத்த பிரபல பாடகர்.. வைரலாகும் வீடியோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் பல்லை பிரபல பாடகர் ஜேசன் டெருலோ உடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

விளையாட்டு வினையாகும் என்று சொல்வார்கள் அதே போல ஒரு சம்பவம் ஹாலிவுட்டில் நடந்துள்ளது.

கோல்ஃப் விளையாட்டு சொல்லிக் கொடுக்க முயன்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது.

View this post on Instagram

And we never saw @jasonderulo again

A post shared by Will Smith (@willsmith) on

வினையான விளையாட்டு

பேட் பாய்ஸ், எம்.ஐ.பி உள்ளிட்ட பிரபல படங்களில் நடித்து உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் வில் ஸ்மித், பாப் சிங்கர் ஜேசன் டெருலோவுக்கு கோல்ஃப் விளையாட்டை சொல்லிக் கொடுக்கும் போது, அவர் எதிர்பாராமல் ஸ்டிக்கை வில் ஸ்மித் பக்கம் வீச, வில் ஸ்மித்தின் முன் பல் உடைந்து விட்டதாக வீடியோவை வெளியிட்டுள்ளார் வில் ஸ்மித்.

ஓட்டப் பல் செல்ஃபி

ஓட்டப் பல் செல்ஃபி

நடிகர் வில் ஸ்மித் மற்றும் ஜேசன் டெருலோ ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். வில் ஸ்மித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அவருடன் பல வீடியோக்களை பதிவிட்டு, லைக்குகளை குவித்து வரும் வில் ஸ்மித் தற்போது இந்த வீடியோவையும், அதன் பிறகு ஓட்டப் பல்லுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தையும் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

12 மில்லியன் லைக்ஸ்

12 மில்லியன் லைக்ஸ்

வில் ஸ்மித் பகிர்ந்த அந்த வீடியோ கிட்டத்தட்ட 12.2 மில்லியன் லைக்குகளையும், 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளன. மேலும், இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட அந்த செல்ஃபி புகைப்படத்தை இஷா குப்தா உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலர் லைக் செய்துள்ள நிலையில், 3 மில்லியனுக்கும் மேல் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

பிரான்க் வீடியோ

இதற்கு முன்னதாகவும் இருவரும் இணைந்து செய்த பிராங்க் வீடியோ ஒன்று சர்வதேச ரசிகர்களை கவர்ந்தது. டீசர்ட் ஒன்றை ஆங்கரில் இருந்து எடுத்து டேபிளில் வில் ஸ்மித் போட, மேசையில் இடித்துக் கொண்டு பாப் சிங்கர் ஜேசன் அடிபடுவது போன்ற வீடியோ வைரலானது. இந்நிலையில், தற்போது வெளியிட்டு இருக்கும் பல் உடைந்த வீடியோவும் இவர்கள் செய்த பிராங்க் தான் என கூறி வருகின்றனர்.

இன்னொருவருடன் தொடர்பு

இன்னொருவருடன் தொடர்பு

சமீபத்தில் தனது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் உடன் இணைந்து ரெட் டேபிள் எனும் ஃபேஸ்புக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வில் ஸ்மித். அந்த நிகழ்ச்சியில், தனது மகனின் நண்பருடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்தும், வில் ஸ்மித்துடன் விவாகரத்து பெற்ற நிலையில், அதை உங்களிடம் கூற வேண்டிய அவசியம் வரவில்லை என்று இருவரும் நேரலையில் பேசிய வீடியோ சர்ச்சையை கிளப்பி வேற லெவலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X