ஆஸ்கர் அறை சர்ச்சை.. மீண்டும் அதிரடி காட்ட வந்த வில் ஸ்மித்.. Bad Boys: Ride or Die டிரெய்லர் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: வெள்ளை நிற நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹாலிவுட்டில் கருப்பு நிற ஆக்சன் ஹீரோவாக உலக அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் வில் ஸ்மித். அதிகம் படித்த அறிவாளிகள் அமெரிக்காவில் கூட இன்னமும் இனவெறி நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது. அதை எல்லாம் சமாளித்து டாப் ஹீரோவாக வளர வில் ஸ்மித்துக்கு பேட் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய பலமாக இருந்தது.

1992 ஆம் ஆண்டு 'வேர் த டே டேக்ஸ் யூ' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான வில் ஸ்மித் அடுத்ததாக மேட் இன் அமெரிக்கா மற்றும் சிக்ஸ் டிகிரீஸ் ஆஃப் செபரேஷன் படங்களில் நடித்து முடித்துவிட்டு 1995 ஆம் ஆண்டு பேட் பாய்ஸ் படத்தில் மார்ட்டின் லாரன்சுடன் இணைந்து நடிக்கத் தொடங்க அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறுகிறது.

Will Smith s Bad Boys Ride or Die Tamil Trailer out now

இண்டிபெண்டன்ஸ் டே படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வில் ஸ்மித்துக்கு கிடைக்க மென் இன் பிளாக், எனிமி ஆப் தி ஸ்டேட், வைல்ட் வைல்ட் வெஸ்ட், ஐ ரோபோ, தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் என வரிசையாக வெற்றி படங்களை குவித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் வில் ஸ்மித்.

அதிரடி ஆக்ஷன் ஹீரோ: பேட் பாய்ஸ் வரிசை படங்கள் ஒரு பக்கம், மென் இன் பிளாக் சீரிஸ் இன்னொரு பக்கம் அதைத் தாண்டி பல பிரம்மாண்ட படங்கள் என அதிரடி ஆக்சன் ஹீரோவாக மாஸ் காட்டிய வில் ஸ்மித் தன்னுடைய சிறப்பான நடிப்பை சில படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்கர் விருது: தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ், அலி, கன்கஷன் போன்ற படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் ஸ்மித்துக்கு கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் நடித்த கிங் ரிச்சர்ட் திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் என இரண்டு டென்னிஸ் வீராங்கனைகளை பெற்று வளர்த்து டென்னிஸ் வீராங்கனைகளாக மாற்றிய அவர்களது தந்தை ரிச்சர்ட் பயோபிக்கில் நடித்து ஆஸ்கர் விருதை வென்றார்.

ஆத்திரத்தால் நேர்ந்த கதி: அதே ஆஸ்கர் மேடையில் தனது மனைவி குறித்து தப்பான கமெண்ட் அடித்தார் தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்கிற கோபத்தின் காரணமாக ஆஸ்கர் மேடையில் ஏறி அவரை ஓங்கி ஒரு அறை விட ஆஸ்கர் போட்டியை தாண்டி அந்த விவகாரம் உலகளவில் டிரெண்டானது. அதற்கு தண்டனையாக 10 ஆண்டுகள் ஆஸ்கர் மெம்பராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் வில் ஸ்மித்.

பேட் பாய்ஸ் கடைசி பாகம்: கடந்த 2020-ஆம் ஆண்டு பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் படத்தில் வில் ஸ்மித் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பேட் பாய்ஸ் ரைட் ஆர் டை படம் உருவாகி அடுத்த மாதம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் தான் பேட் பாய்ஸ் சீரிஸின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.

வேறலெவல் மிரட்டல்: அதில் மற்றும் பிலால் இயக்கத்தில் வில் ஸ்மித் மற்றும் மார்ட்டின் லாரன்ஸ் மீண்டும் இணைந்து வேற லெவல் மிரட்டலில் நடித்துள்ள பேட் பாய்ஸ் திரைப்படம் வரும் ஜூன் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி தமிழ் டப்பிங் உடன் வெளியாகிறது. இந்நிலையில் அதன் தாறுமாறான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கடைசி சீனில் மார்ட்டின் லாரன்ஸ் முதலையிடம் மாட்டிக்கொள்ளும் காட்சி காமெடி சரவெடி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X