வொண்டர் வுமன் நடிகை வீட்டில் விசேஷம்.. 38ஆவது வயதில் நான்காவது பெண் குழந்தையை பெற்றார்
நியூயார்க்: வொண்டர் வுமன் படம் மூலம் பிரபலமானவர் கேல் கடாட். இதுவரை வொண்டர் வுமன், வொண்டர் வுமன் 1984 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவருக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதுதொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் கேல் கெடாட். மாடலிங்கில் விருப்பம் உடைய அவர் தனது 18ஆவது வயதில் மிஸ் இஸ்ரேல் பட்டத்தை தட்டி சென்றார். அதன் பிறகு ஃபேமஸான அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. தொடர்ந்து படங்களில் நடித்த அவருக்கு வொண்டர் வுமன் திரைப்படம் மிகச்சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம் மெகா ஹிட்டடிக்க அவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.

வொண்டர் வுமன்: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் சில காலம் ராணுவத்திலும் பணியாற்றினார். பொதுவாக ஹாலிவுட்டில் வெளியாகு சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்தவகையில் உருவானதுதான் டிசி நிறுவனத்தின் வொண்டர் வுமன். ஸாக் ஸ்னைடர் யுனிவர்ஸில் உருவான அந்தப் படத்தில் வொண்டர் வுமனாக கலக்கியிருந்தார் கேல் கடாட்.
திருமணம்: பிஸியான நடிகையாக வலம் வந்த கேல் கடாட் கடந்த 2008ஆம் ஆண்டு ஜான் வர்சானோ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாகவே போய்க்கொண்டிருக்கிறது. அவர்களது காதலுக்கு அடையாளமாக முதல் குழந்தையாக அல்மா என்ற பெண் குழந்தை பிறந்தார். அவருக்கு தற்போது ஒன்பது வயதாகிறது. அடுத்ததாக மாயா என்ற பெயரில் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.
நான்காவது குழந்தை: சூழல் இப்படி இருக்க அவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு டேனியாலா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் சூழலில் மீண்டும் கர்ப்பமானார் கேல் கடாட். இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அவருக்கு ஓரி என்று பெயர் வைத்திருக்கிறார். ஓரி என்றால் ஹிப்ரு மொழியில் எனது ஒளி என்று அர்த்தம் ஆகும். அதுதொடர்பான அறிவிப்பை புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார் கேல் கடாட்.
தொடர்ந்து நடிப்பேன்: நான்காவதாக பெண் குழந்தை பெற்ற அவருக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். நான்காவதாக குழந்தை பெற்றுக்கொண்டாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் தெரிவித்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஏற்கனவே 2020ஆம் ஆண்டு வெளியான வொண்டர் வுமனில் கேல் கடாட் நடித்தபோதே மூன்றாவது குழந்தையை தனது வயிற்றில் சுமந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











