கண்கொள்ளாக் காட்சி... அநியாயத்துக்கு நிறைய உடை அணிந்து நீந்திய மடோனா!

மடோனா என்றால் அவரது டிரஸ்ஸிங் கலக்கல்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். 50 வயதிலும் கட்டழகோடு கலக்கல் டிரஸ்ஸோடு காட்சி தரும் மடோனா, சமீப காலமாக தனது பாடல் நிகழ்ச்சிகளின்போது மார்பகங்களை வெளிக்காட்டி பிரமிக்கவும் வைத்து வருகிறார்.
இந்த வயதிலும் காதலர்களை அவ்வப்போது மாற்றி கலங்கடித்தும் வருகிறார். லேட்டஸ்டாக அவரது காதலராக இருப்பவர் சின்னப் பையன் என்று செல்லமாக அழைக்கப்படும் பிராஹிம் ஜைபாத்.
இந்த நிலையில் தனது மகள் லூர்தஸ், காதலர் பிராஹிம் உள்ளிட்டோருடன் தெற்கு பிரான்ஸில் உள்ள கடற்கரைக்கு வந்த மடோனா, அங்கு அவர்களுடன் ஜாலியாக பொழுதைப் போக்கினார். மகள் லூர்தஸ் நீச்சல் உடையில் காட்சி தர, பாய்பிரண்ட் பிராஹிம் டிரவுசருடன் கலக்க, மடோனோ மட்டும் கழுத்து முதல் கால் வரை மூடிய வெள்ளை நிற உடையுடன் வித்தியாசமாக காட்சியளித்தார். இந்த உடையில் அவர் நீச்சலடித்தும் அசத்தினார்.
அவர் போட்டிருந்த உடைகளைப் பார்க்கும்போது, வருடம் பூராவும் போடும் உடைகளை விட அதிகம் போட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்து விரைவில் ஒரு இசை நிழ்ச்சியை அவர் பிரான்ஸில் நடத்தப் போகிறார். அந்த நிகழ்ச்சியின்போது வழக்கம் போல அவர் என்னத்தை செய்து பயமுறுத்தப் போகிறாரோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











