பல காதலிகள்.. பல மனைவிகள்.. ஓஹோனு வாழ்ந்த ஜான் சீனாவின் டேட்டிங் கதை!

சென்னை: WWE மல்யுத்தப் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களைக் குவித்து உலகப் புகழ்பெற்றவர் ஜான் சீனா. நடிகர்கள் மற்றும் மற்ற விளையாட்டு வீரர்கள் என உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்து இருக்கிறார் இவர். இந்த செய்தியில் ஜான் சீனாவின் காதல் லீலைகள் மற்றும் டேட்டிங் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஜான் சீனாவின் பெயரைக் கேட்டாலே, 90s கிட்ஸ்களின் மனங்களில் உற்சாகம் பெருக்கெடுக்கும். ஜான் சீனா களத்திற்குள் என்ட்ரி கொடுக்கும் ஸ்டைல், தனித்துவமான திறமையால் எதிராளியை துவம்சம் செய்துவிடுவார். WWE பட்டத்தை மொத்தம் 13 முறையும், உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை 3 முறையும், ராயல் ரம்பிளை 2 முறையும் வென்றுள்ளார்.

John Cena Hollywood

ஜான் சீனா: திறமையாளரான ஜான் சீனாவிற்கு ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட காதல் கதை உண்டு, காதலியும் உண்டு. அவர் முதன் முதலில், உயர்நிலைப் பள்ளி படித்துக்கொண்டு இருந்த போது எலிசபெத் ஹூபர்டோவை காதலித்தார். இவர்களின் திருமணம். 2009ஆம் ஆண்டு நடந்தது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இரண்டு பேரும், 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

டேட்டிங்: இதைத் தொடர்ந்து WWEவின் சக நட்சத்திரமான நிக்கி பெல்லாவுடன் அவருக்கு காதல் ஏற்பட இருவரும் நெருங்கி பழகினார்கள். இருவரும் உறவில் இருந்த நிலையில், 2017ம் ஆண்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவரும் 2018ம் ஆண்டு பிரிந்தனர். அதன் பின் ஜான் சீனா மற்றொரு WWE நட்சத்திரமான ஏஜே லீயை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அது வெறும் வதந்தி என ஜான் சீனாவே ஒரு முறை விளக்கம் கொடுத்திருந்தார்.

John Cena Hollywood

மீண்டும் திருமணம் : இரண்டு காதல் முறிவுக்கு பிறகும் நிற்காத ஜான் சீனாவின் காதல் கதை, பொறியாளரான ஷாய் ஷரியாத்சாதே "ப்ளேயிங் வித் ஃபயர்" படப்பிடிப்பின் போது சந்தித்தார். அதன் பின் அவரை காதலித்து 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமண உறவில் ஜான் சீனா இருந்த போதும், WWE இல் விக்டோரியா என அழைக்கப்படும் லிசா மேரி வரோனுடன் ஜான் சீனா தொடர்பில் இருந்தார். இந்த உறவும் சில நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

கிசுகிசு: அதுமட்டுமில்லாமல், திரைப்பட நடிகை கேந்திரா லஸ்டுடன் ஜான் சீனா உறவில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த டேட்டிங்குகள் அனைத்தும், ஷரியாட்சாதே திருமண உறவில் இருந்த போதுதான் பரப்பப்பட்டன. இருந்த போதும், தற்போது வரை , ஷாய் ஷரியாத்சாதே மற்றும் ஜான் சீனா தம்பதியினர் இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். அன்பு , மரியாதை, புரிதல் போன்றவற்றால், திருமண வாழ்க்கை ஜான் சீனாவின் போக்கை மாற்றிவிட்டது என்று சொல்லலாம்.

John Cena Hollywood

More from Filmibeat

Read more about: john cena hollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X