வேகமாக ஓடிய போது விபரீதம்.. ரியாலிட்டி ஷோவில் மயங்கி விழுந்த பிரபல நடிகர் திடீர் மாரடைப்பால் மரணம்

சீனாவில் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

ரியாலிட்டி ஷோவில் மயங்கி விழுந்த பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்

பிஜியிங்: சீனாவில் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகர் ஒருவர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள அத்தனை தொலைக்காட்சிகளிலும் இன்று பிரபலமாக இருப்பவை ரியாரிட்டி ஷோக்கள். இந்நிகழ்ச்சிகள் பல சமயம் போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நல்ல விருந்தாக அமைகிறது.

ஆனால் சில நேரங்களில் அவை ஆபத்தை ஏற்படுத்திவிடுகின்றன. போட்டியாளர்களுக்கு அவர்களது உடல்நிலைக்கு மீறிய போட்டிகளை வைப்பது தான் அதற்கு காரணம்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

அதுபோல் தான் சீன தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தைவானில் பிறந்து, கனடா நாட்டில் வளர்ந்தவர் காட்ஃப்ரே காவ். இவர் பிரபல நடிகராவார்.

சேஸ் மீ ஷோ

சேஸ் மீ ஷோ

35 வயதாகும் காட்ஃப்ரே காவ் சீன தொலைக்காட்சி நடத்தும் 'சேஸ் மீ' எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு டாஸ்க்கில் காஃப்ட்ரே வேகமாக ஓடும் படி நேர்ந்தது. ஓடிக்கொண்டே இருந்தவர் திடீரென நிலைகுலைந்து தரையில் சரிந்துவிழுந்தார்.

சிகிச்சை

சிகிச்சை

படப்பிடிப்பு அரங்கில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். ஆனால் காட்ஃப்ரே உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் உயிரை காப்பாற்ற மூன்று மணி நேரத்துக்கு மேலாக போராடினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காஃப்ட்ரே உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

ஓடும்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு தான் காஃப்ட்ரேவின் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ரியாலிட்டி ஷோ ஒருங்கிணைப்பாளர்கள், காட்ஃப்ரேவின் உடல் தகுதிக்கு மீறி, அவரிடம் வேலை வாங்கினார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: death மரணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X