18 கோடிக்கு கன்னித்தன்மையை விற்ற 22 வயது மாணவி.. அதையும் ஏலத்தில் வாங்கிய பிரபல நடிகர்.. காலக்கொடுமை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக பலரும் அதற்கு எதிராக போராடி வரும் நிலையில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட இதே மார்ச் மாதத்தில் தனது கன்னித்தன்மையை 22 வயது மாணவி ஏலத்தில் விட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியாகி உள்ளது.
ஜென் Z ஜெனரேஷன் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ என்கிற பயமும் கூடவே தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. குடும்ப வறுமை காரணமாக சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் ஈட்டுவதை அறிந்திருப்போம். அதுவே தவறு என்றும் அந்த பெண்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை அரசு உருவாக்கித் தர வேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகம் எழுந்து வரும் சூழ்நிலையில், சில இன்ஸ்டாகிராம் அக்காக்கள் ஆபாசமாக வீடியோ வெளியிட்டு சம்பாதிக்க தொடங்கியுள்ளனர்.

ஒன்லி ஃபேன்ஸ் எனும் கணக்கை தொடங்கி வீடியோ கால், சாட், ஆபாச புகைப்படங்களை பகிர்வது என ஸ்மார்ட் போனிலேயே விபச்சாரங்கள் கொடி கட்டி பறந்து வரும் நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டு சம்பாதித்து இருப்பது உலக அளவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
18 கோடிக்கு ஏலம்: விலை மாதுவாக போகும் பெண்களுக்கு எல்லாம் இப்படியொரு விஷயம் இருக்கு என்று தெரிந்தால் அவர்களும் கோடீஸ்வரிகளாக ஓவர் நைட்டில் ஆகிவிடுவார்கள் என்கிற அச்சம் எழத்தான் செய்கிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி தனது கன்னித்தன்மையை ஏலம் விட அதிகபட்சமாக £1.7 மில்லியன் (18 கோடிக்கு) ஏலத்துக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் அவரது கன்னித்தன்மையை வாங்கியுள்ளாராம்.
யாரு அந்த இளம்பெண்: இங்கிலாந்தை சேர்ந்த லாரா எனும் 22 வயது இளம் பெண் தான் இப்படியொரு வேலையை பார்த்திருக்கிறார். எஸ்கார்ட் ஏஜென்ஸி பிளாட்ஃபார்ம் மூலமாக தனது விர்ஜினிட்டியை ஏலம் விட்டு கோடீஸ்வரியாக மாறியுள்ளார். அந்த இளம் பெண்ணின் கன்னித்தன்மையை வாங்கும் போட்டியில் பிரபல அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், நடிகர்களும் இடம்பெற்றிருந்தனர் என்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தான் கடைசியில் லாராவின் விர்ஜினிட்டியை ஏலத்தில் எடுத்துள்ளார் என்கின்றனர். பிரைவஸி கருதி அந்த நடிகரின் பெயரை லாரா ரிவீல் செய்யவில்லை. குடும்ப வறுமை காரணமாகவும் பணத்தேவைக்காகவும் தனது கன்னித்தன்மையை விற்றதாகவும் இதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் அவர் பேட்டியளித்துள்ளார்.
காலக்கொடுமை: உலகம் எங்கே போகுது என்றும் இளைஞர்கள் எப்படியெல்லாம் சம்பாதித்து சொகுசாக வாழ வேண்டும் என்பதை மட்டுமே யோசிக்கிறார்கள் என்றும் உழைத்து உயர வேண்டும் என்கிற எண்ணத்தோடு வளரும் பல இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் இது தவறான உதாரணமாகி விடும் என்றும் இப்படியெல்லாம் செய்யக் கூடாது என அறிவுறுத்த வேண்டிய படித்தவர்களே படிக்கும் மாணவியின் கன்னித்தன்மையை வாங்க போட்டிப் போட்டு ஏலத்தில் பெரிய தொகை கொடுத்து வாங்குவதெல்லாம் சைக்கோத்தனமான மனநிலை கொண்டவர்களால் மட்டுமே முடியும் என அடையாளம் தெரியாத அந்த பிரபல ஹாலிவுட் நடிகரை நெட்டிசன்கள் அசிங்கமாக திட்டி வருகின்றனர். இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!


Click it and Unblock the Notifications











