அடக்கடவுளே.. 18 வயது இளம் ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை

லாஸ் ஏஞ்சல்: Just Add Magic படத்தில் நடித்ததற்காக எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 வயது இளம் ஹாலிவுட் நடிகர் டைலர் சாண்டர்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்தது ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் சினிமா துறையில் இப்படி ஏராளமான சிறு வயது மரணங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

இந்தியாவிலும் கடந்த சில மாதங்களில் ஏகப்பட்ட இளம் நடிகைகள் மர்மமான முறையில் உயிரிந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபலங்கள் மரணம்

பிரபலங்கள் மரணம்

இந்தியாவில் மட்டுமின்றி கொரிய சினிமா உலகிலும் ஹாலிவுட் திரையுலகிலும் இப்படி ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அதிலும், சிறு வயதில் சாதிக்கும் முனைப்பில் இருக்கும் பல இளம் நடிகர்கள் மர்மமான முறையிலோ அல்லது மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டோ உயிரிழக்கும் சூழல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஹாலிவுட்டின் இளம் நடிகர் டைலர் சாண்டர்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்தது அவருடைய ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

18 வயசு தான் ஆகுது

18 வயசு தான் ஆகுது

கடந்த 2019ம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோ சீரிஸில் வெளியான Just Add Magic வெப்சீரிஸில் கேமியோ ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஹாலிவுட்டின் இளம் நடிகர் டைலர் சாண்டர்ஸ் அவரது நடிப்புக்காக எம்மி விருதுக்கு நாமினேட் ஆகி இருந்தார். இந்நிலையில், மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததை அறிந்து ஹாலிவுட் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அவருக்கு வெறும் 18 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழனன்று உயிரிழந்த இவரது மரணம் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

ஹாலிவுட்டில் 10 வயது முதலே பல படங்கள் மற்றும் டிவி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் டைலர் சாண்டர்ஸ். கடந்த 2017ம் ஆண்டு 'Fear the Walking Dead' எனும் பிரபல தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தார். இளம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் இவ்வளவு சீக்கிரம் உயிரிழந்தது பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

கடைசி படம்

கடைசி படம்

சமயல் புத்தகத்தில் உள்ள மேஜிக்கை கொண்டு உருவாக்கப்பட்ட Just Add Magic வெப்சீரிஸில் லியோ எனும் கதாபாத்திரத்தில் நடித்த டைலர் சாண்டர்ஸ் கடந்த 2019ம் ஆண்டு கெவின் சார்போ நடிப்பில் வெளியான 'The Reliant' படத்தில் நடித்திருந்தார். அவர் நடிப்பில் கடைசியாக உருவாகி உள்ள 'The Price We Play' எனும் திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X