மிரட்டுது.. ’டிசி’லயும் ஒரு தானோஸ்.. வெளியானது ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட் டீசர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெலுக்கு ஒரு தானோஸ் போல டிசிக்கு ஒரு 'டார்க்சீட்' உருவாகி விட்டதை தற்போது வெளியாகி இருக்கும் அட்டகாசமான டீசரில் ரிவீல் செய்துள்ளனர்.
மார்வெல் ரசிகர்களுக்கு எப்படி அவெஞ்சர்ஸ் படமோ அதே போல, டிசி ரசிகர்களுக்கான மல்டி சூப்பர் ஹீரோ படமாக ஜஸ்டிஸ் லீக் படம் இருக்கிறது.

ஆனால், முதலில் வெளியான ஜஸ்டிஸ் லீக் படம் அவெஞ்சர்ஸ் படம் அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தவில்லை. வசூல் ரீதியாகவும் சொதப்பல் தான்.
தனியாக வெளியான பேட்மேன், சூப்பர்மேன், ஒண்டர் உமன், ஆக்வாமேன் உள்ளிட்ட படங்கள் அதிரி புதிரி வசூலை குவித்தாலும், இவர்கள் மொத்தமாக ஒன்று சேர்ந்து நடித்து கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஜஸ்டிஸ் லீக் திரைப்படம் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையே கொடுத்தது.
இந்நிலையில், இயக்குநர் ஜாக் ஸ்நைடர், வேற லெவல் மிரட்டலில் Justice League படத்தின் தனது வெர்ஷன் டீசரை தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
டிசி படங்களில் அதிக வசூலை குவித்த கேல் கடோட்டின் ஒண்டர் உமன் கதாபாத்திரம் மற்றும் டிசியின் புதிய தானோஸ் வில்லனாக அவதாரமெடுத்து இருக்கும் டார்க்சீட் இருவரும் வரும் 34 நொடி காட்சிகள் இந்த புதிய டீசரில் இடம்பெற்றிருக்கிறது.
இந்த டீசர் வெளியான பிறகு, வழக்கம் போல மார்வெல் மற்றும் டிசி ரசிகர்கள் மத்தியில் மோதல்களும், ட்ரோல்களும் வெடித்துள்ளன.
லாக்டவுன் தளர்வுகள் ஹாலிவுட் படங்களின் ரிலீஸையும் தள்ளிப் போட்டு வரும் நிலையில், நிலைமை சீரானதும் இந்த வெர்ஷன் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் உருவாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











