வயசான ஹீரோவும் ஓகே-காஜல்

By Staff

Kajal Agarwal
இளம் ஹீரோக்கள்தான் வேண்டும் என்று நான் இயக்குநர்களிடம் முரண்டு பிடிப்பதாகக் கூறுவது தவறு. வயதைப் பற்றி கவலையில்லை. எனக்கு என் ரோல்தான் முக்கியம் என்கிறார் காஜல் அகர்வால்.

காஜல் புதுமுகமாக நடிக்க வந்தது பொம்மலாட்டம் படத்தில்.ஆனால் அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, பழனி, சரோஜா என இரண்டு ஹிட்களைக் கொடுத்து கமர்ஷியல் நாயகியாகிவிட்டார் காஜல். இப்போது அவரது கைவசம் மோதி விளையாடு உள்பட நான்கு புதுப்படங்கள். இந்த மாதம் பொம்மலாட்டமும் வரப்போவதாக கூறுகிறார்கள்.

ஆனால் அம்மணியைப் பற்றி ஒரு வதந்தி உலாவுகிறது. அதாவது நடிக்கும் எல்லா படங்களிலுமே தனக்கு ஜோடியாக இளம் நாயகர்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம்.

உண்மையா... காஜலிடமே கேட்டோம்...!

"இதில் எள்ளளவும் உண்மையில்லை. நான் நடித்த முதல் படத்தில் எனக்கு ஜோடி அர்ஜூன். இதோ இப்போது மீண்டும் அவருடன்தான் இன்னொரு படம் நடிக்கப் போகிறேன்.

நான் நடிக்கும் படத்தில் எனக்கென்ன ரோல் என்றுதான் பார்ப்பேனே தவிர, எனது ஹீரோக்களுக்கு என்ன வயது என்று பார்ப்பதில்லை. தெலுங்கில்கூட இரண்டு படங்கல் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு படத்தில் ராம்சரண் தேஜா, இன்னொன்றில் அல்லு அரவிந்த் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆனால் என்னிடம் கதை சொன்னபோது என் ஹீரோக்கள் யார் என்றே எனக்குத் தெரியாது.

கதையும் எனது கேரக்டரையும் மட்டுமே பார்த்தேன். மற்றபடி இளம் ஹீரோக்களுடன் நடிப்பது ஏதேச்சையாக அமைந்ததுதான். வயதான ஹீரோவாக இருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை.

பொம்மலாட்டம் ரிலீசாகியிருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. மோதி விளையாடு படத்தில் கல்லூரி மாணவி வேடம் ஏற்கிறேன். கோபக்கார பெண் வேடம். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது", என்றார் காஜல்.

கேட்க வேண்டியவங்களுக்கு கேட்டா சரி!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X