பத்மஸ்ரீ விருதுக்கு நான் முற்றிலும் பொருத்தமானவனே- சைஃப் அலி கான்

By Staff

Saifali and Kareena
பத்மஸ்ரீ விருதுக்கு நான் முற்றிலும் பொருத்தமானவன்தான். அந்த விருதுக்கு கெளரவம் சேர்க்கும் வகையில் நான் நடந்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சைஃப் அலி கான்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த சில வருடங்களாக இந்த விருதுகள் யாருக்கெல்லாம் அளிக்கப்பட்டு வருகிறது என்று பாருங்கள். நிச்சயம் அனைவரும் அணு குண்டு கண்டுபிடித்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

எனவே அப்படிப்பட்ட சாதனை படைத்தவர்களுக்கு மட்டும்தான் இந்த விருது கொடுக்கப்பட்டு வருகிறது, எனவே எனக்குக் கொடுக்கப்பட்டது தவறு என்று கூறக் கூடாது.

இருப்பினும் என்னை விடத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். என்னை விடத் தகுதியான பலருக்கு, எனக்கு விருது கிடைத்திருப்பது வியப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கலாம். அதை நான் நிச்சயம் மறுக்கவில்லை.

நான் வயதில் இளையவன். எனவே நிச்சயம் என்னை விட தகுதியான பலர் இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்றார் கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X