கோலிவுட்டுக்கே முன்னுரிமை!-முருகதாஸ்

ஆமீர்கான்-ஆசின் நடித்த கஜினியின் இந்தி ரீமேக்குக்கு ஒதுக்கப்பட்டது வெறும் ரூ. 40 கோடி. ஆனால் இயக்குநர் முருகதாஸ் அந்தப் படத்தை ரூ.27 கோடியிலேயே தரமாக எடுத்து முடித்துவிட்டாராம். ஆனால் அதன் வினியோக உரிமை மட்டும் ரூ. 90 கோடியை தாண்டி விற்றுள்ளதாம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் ரிலீசாகப் போகும் இந்தப் படத்தின் முதல் ரஷ் பார்த்த ஆமிர்கான், தனது அடுத்தடுத்த இரு படங்களையும் கூட இயக்க தேதிகள் வேண்டும் என முருகதாசைக் கேட்டுக் கொண்டாராம்.
அடுத்து தமிழில் ஒரு படம் முடித்துவிட்டு இவற்றை ஒப்புக் கொள்வதாகக் கூறியுள்ளார் முருகதாஸ்.
இவரது கடின உழைப்பையும் விரைந்து படத்தை முடிக்கும் திறமையையும் பார்த்து, மேலும் பல தயாரிப்பாளர்கள் அட்வான்சுடன் காத்திருக்கிறார்களாம். 7 கோடி வரை சம்பளம் கொடுக்கவும் தயாராம். ஆனால் முருகதாஸ்தான் தமிழ் படம் இயக்குவதில் பிடிவாதமாக உள்ளார்.
அவர் கூறுகையில்,
எனது அடுத்தப் படம் தமிழுக்குதான் என்பதில் உறுதியாக இருக்கி்றேன். இப்போது என்னிடம் 2 வித்தியாசம்ன கதைகள் உள்ளன. இவற்றில் ஒன்று மூத்த நடிகர்களுக்கு கச்சிதமாக பொருந்தக் கூடியது. ஆனால் ரஜினியை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மற்றொன்றில் இளம் நாயகர்களை வைத்து இயக்கும் திட்டம் உள்ளது. இப்போது உடனடியாக சூர்யாவுக்கு ஒரு படம் பண்ணும் எண்ணமுள்ளது. நான் வெளியே எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், எனக்குப் பிடித்த இடம் கோலிவுட்தான் என்றார் முருகதாஸ்.


Click it and Unblock the Notifications











