சினிமாவுக்கு நிலா குட்பை!

அன்பே ஆருயிரே படத்தில் நடிக்க சிம்ரனின் கால்ஷீட் கிடைக்காததால், அதே பஞ்சாபிலிருந்து எஸ்.ஜே.சூர்யாவால் அழைத்து வரப்பட்டவர் நிலா.
அந்தப் படம் நன்றாக ஓடியது. ஆனால் நிலாவின் மார்க்கெட் மதிப்புதான் கூடவில்லை. அதன் பிறகு சில படங்களில் அவர் நடித்தும் கூட அவருக்கு நட்சத்திர அந்தஸ்தே வரவில்லை.
இடையில் ஆர்யாவுடன் காதல், படப்பிடிப்பிலிருந்து ஓடல் என்று சர்ச்சைகளிலும் சிக்கினார். தெலுங்கிலும் நடித்துப் பார்த்தார். எதுவும் தேறவில்லை.
தற்போது நமீதா நடிக்கும் ஜெகன்மோகினியில் நடித்துள்ளார். இந்த நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்குப் போட்டு விட்டாராம் நிலா. அதற்குப் பதிலாக நியூயார்க்கில் தான் நடத்தி வரும் ஹோட்டல் தொழிலில் கவனம் செலுத்தப் போகிறாராம். அந்த ஹோட்டலின் டெல்லி கிளையை விரைவில் திறந்து முழு நேர தொழிலதிபராக மாறத் திட்டமிட்டுள்ளாராம்.
எனக்கு நடிப்பு பொருத்தமானதாக இல்லை. இந்த திரைத் துறைக்கும் நான் பொருத்தமானவளாக இல்லை. எனக்கு நடிப்பு போரடித்து விட்டது. ஒருபோதும் நான் பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்று நினைத்ததே இல்லை.
ஜெகன்மோகினியுடன் எனது நடிப்பை நிறுத்துகிறேன். இதற்கு மேலும் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. நியூயார்க்கில் உள்ள ஹோட்டலின் கிளையை டெல்லியில் திறக்கப் போகிறேன். அந்தத் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் நிலா.
'ஸ்வீட் ட்ரீம்ஸ்' நிலா..!


Click it and Unblock the Notifications











