ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்

By Chakra

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். இதனால் அவரைப் போலவே ஸ்டைலாக கண்ணாடியை சுழற்றி அணியப் பழகினேன். ஆனால் முடியவில்லை என்றார் ஐஸ்வர்யா ராய்.

மும்பையில் அவர் அளித்த பேட்டி:

நம் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நடிகைகளால் திருமணத்திற்கு முன்பு வரைதான் நாயகியாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

என்னைப் பொறுத்த வரை திருமணத்திற்கு முன்பு இருந்த வரவேற்பு திருமணத்திற்கு பிறகும் இருக்கிறது. இயக்குநர்களும் எந்தவித பயமும் இல்லாமல் பிரமாண்ட படங்களில் நடிக்க வைக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடிப்பேன். எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை.

இதனால்கூட எனது படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன்.

எனக்கு ரஜினி சாரின் ஸ்டைல், நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த நிறைய தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் அவரது ஸ்டைல் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கேமரா முன்பு அவர் சிறிது தூரம் நடந்து சென்று டக்கென திரும்பி லேசாக ஒரு சிரிப்பு சிரிக்கும்போது நம்மை அறியாமல் கைதட்ட தோன்றும். நடிப்பில் அப்படி ஒரு ஈர்ப்பு. வசீகரம்.

இதனால்தான் ரசிகர்கள் அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் விசில் அடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். அவரிடம் இருந்து நான் நடிப்பில் நிறைய டெக்னிக்குகள் கற்றுக்கொண்டேன்.

அவருடன் படப்பிடிப்பில் இருந்தபோது கண்ணாடியை சுழற்றி மாற்ற பழக முயன்றேன். ஆனால் அவர் செய்யும் கண்ணாடி சுழற்றும் ஸ்டைல் எனக்கு சுத்தமாக வரவில்லை.

ஒருவேளை நான் இதை கற்றிருந்தால் கணவர் அபிஷேக்பச்சனுக்கும் சொல்லி கொடுக்கலாம் என்று நினைத்தேன். அது முடியாமல் போய்விட்டது என்றார் ஐஸ்வர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X