சிம்புவுடன் நடிக்க நான் எப்போதும் மறுக்கவில்லை என்றார் நடிகை அனுஷ்கா.

அனுஷ்காவிடம் தொடர்ந்து வற்புறுத்தி இறுதியில் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளனர்.
சிம்புவுடன் நடிக்க மறுத்தது ஏன் என்று அனுஷ்காவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
வேதம் அற்புதமான கதை தெலுங்கில் தயாரான இப்படத்தில் நான் நடித்தேன். தமிழில் வானம் பெயரில் ரீமேக் செய்ய முடிவு எடுத்ததும் என்னிடம் நடிக்க கேட்டனர். சிம்பு கதாநாயகன் என்றனர். நான் சம்மதித்தேன். சிம்புவுடன் நடிக்க ஆரம்பத்தில் நான் மறுத்ததாக வதந்திகள் பரவின. அவை வெறும் வதந்திதான். நான் எப்போதும் மறுப்பு சொல்லவில்லை. அவர் மிக நல்ல நடிகர்.
இந்த படத்தில் நானும் நடிப்பது மகிழ்ச்சிதான். இப்படத்தில் எனது கேரக்டர் சர்ச்சைக்குரியதாக இருக்கும். இமெஜ் வளையத்துக்குள் சிக்க நான் விரும்பவில்லை. படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும். இதில் எனது கேரக்டர் பேசப்படும்படி இருக்கும்...", என்றார்.
Comments


Click it and Unblock the Notifications